ஓட்ஸ் இட்லி ஓட்ஸ் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும் , இது இரத்த கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் இட்லி, ரவா இட்லி போல உடனடியாக செய்யக்கூடியது. ஓட்ஸ் இட்லி அரைத்த ஓட்ஸ், ரவா, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கபடுகிறது.
இரண்டு கேரட்களையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும் .
கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .
மிக்ஸி ஜாரில் ஓட்ஸை சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
பின்னர் கடலைப்பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
துருவிய கேரட் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கிய பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.
மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ரவா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்த ஓட்ஸை சேர்க்கவும். மிதமான சூட்டில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
மேலும் தயிர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு மாவு கெட்டியாக இருப்பதை காணலாம் தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர்மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
இப்பொழுது இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயாரித்துள்ள மாவை ஊற்றி 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
உங்களுக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து பரிமாறலாம்.