Go Back
5 from 1 vote
Gobi_matar
காளிஃபிளவர் பட்டாணி குருமா
Prep Time
10 mins
Cook Time
20 mins
Total Time
30 mins
 
Ingredients
  • 1 காலிபிளவர்
  • 1 கப் பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • ஒரு கையளவு கொத்தமல்லி இலைகள்
  • சில புதினா இலைகள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 10 முந்திரிப் பருப்பு
  • 1/4 கால் கப் பால்
Instructions
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

  6. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.
  7. தற்போது சிறிதாக நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,. 5 முதல் 10 நிமிடங்களுக்கு பாத்திரத்தை மூடி வைத்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  8. ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரிப்பருப்பு மற்றும் கால் கப் பால் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  9. அரைத்து வைத்த கலவையை காலிஃப்ளவர் குருமாவுடன் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  10. சுவையான காலிபிளவர் பட்டாணி குருமா தயார்.