சீரக சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகையாகும். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவாகும். சீரக சாதம் மஸ்ரூம் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் தாளித்த பருப்புடன் சுவையாக இருக்கும்.
பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, ஊறியதும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சூடானதும் பட்டை லவங்கம் ஏலக்காய் மற்றும் அன்னாசி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
பிறகு சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
ஊற வைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு சித்தம் வைக்கவும். சத்தம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
பிரஷர் ரிலீசானதும் குக்கரை திறந்து மென்மையாக கிளறிவிடவும்.