பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி விதைகளை நீக்கி விடவும்.
நறுக்கிய பாகற்காய் புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்னர் பாகற்காய் துண்டுகளை பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும் பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
கலவையை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர், சிறிதளவு எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சுவையான பாகற்காய் வறுவல் தயார்.