புதினா சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சட்னி, இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றோடு சுவையாக இருக்கும்.
ஒரு கட்டு புதினாவில் காம்பை நீக்கிவிட்டு இலைகளை தனியே எடுத்து அலசி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி வைக்கவும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய்களை 1 முதல் 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
பின்னர் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
புதினா இலைகளை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவைக்கவும்.
அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இன்னொரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
சுவையான புதினா சட்னி தயார்.