கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும். கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும்.
பாசுமதி அரிசியை கழுவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும் .
கத்தரிக்காய்களை கழுவி காம்பை நீக்கிவிட்டு ஏழு அல்லது எட்டு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் வேர்க்கடலை, எள் கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும் .
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கவும்.
குக்கரில் பிரஷர் வெளியானதும் குக்கரைத் திறந்து சாதத்தை மென்மையாக கிளறி விடவும். சுவையான கத்தரிக்காய் சாதம் தயார் .