Go Back
வாழைப்பூ வடை
Prep Time
2 hrs 30 mins
Cook Time
20 mins
Total Time
2 hrs 50 mins
 
Ingredients
  • 1 வாழைப்பூ
  • 4 தேக்கரண்டி புளித்த மோர்
  • சில கறிவேப்பிலை இலைகள்
  • 3 வரமிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 கப் கடலை பருப்பு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
Instructions
முன் தயாரிப்பு
  1. கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் மோர் கலந்து வைக்கவும்.
  3. வாழைப் பூவின் மேலே உள்ள இதழ்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பூவின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற தடிமனான பகுதியை நீக்கவும்.
  4. பின்னர் அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அல்லது வாழைப்பூ கருத்து போகும் வாய்ப்புள்ளது.
செய்முறை
  1. ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். 

  2. பின்னர் ஊறவைத்த கடலைப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அரைத்த கலவையுடன் கடலை பருப்பையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

  3. மோரில் ஊற வைத்த வாழைப்பூவை வடித்து விட்டு அரைத்து வைத்துக் கலவையுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும். கவனம்: அதனை நைசாக அரைக்க கூடாது இல்லையேல் வடை கசக்கும் வாய்ப்புள்ளது.

  4.  அரைத்த கலவையில் சிறுசிறு வடைகளாகத் தட்டவும் .
  5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
  6. சுவையான வாழைப்பூ வடை தயார்.