Go Back
பூரி செய்வது எப்படி
Prep Time
20 mins
Cook Time
10 mins
Total Time
30 mins
 

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது.

Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: poori
Ingredients
  • 1 கப் கோதுமை மாவு
  • 2 தேக்கரண்டி ரவை
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
Instructions
  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை கலக்கவும், 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் கலந்து விடவும், சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும்.

  2. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும் . உருட்டிய மாவை பூரிக்கட்டை கொண்டு வட்டவடிவமாக தேய்க்கவும். பூரி தேய்க்கும்போது ஒட்டாமல் வருவதற்கு சிறிது சமையல் எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.

  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் பூரியை போட்டதும், அது உப்பி மேலெழும்பி வரும், அதனை மென்மையாக கரண்டியால் அழுத்தவும். பின்னர் பூரியை கவனமாக திருப்பி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. சூடான பூரியை உருளைகிழங்கு மசாலா உடன் பரிமாறலாம்.