இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
ஊற வைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மறைத்து வைத்துக் கொள்ளவும்.
சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும்.
சுவையான இஞ்சி சட்னி தயார்.