இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சட்னி வகை. இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது இஞ்சி சட்னி அஜீரண கோளாறு, உடல் வலி, போன்றவற்றிற்கு ஏற்றதாகும். இஞ்சி சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னி செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.

Ginger Chutney

இஞ்சி சட்னி
Prep Time
5 mins
Cook Time
10 mins
Total Time
15 mins
 
Ingredients
தேவையான பொருட்கள்
  • 1/2 கப் நறுக்கிய இஞ்சி
  • 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 5 வரமிளகாய்
  • கறிவேப்பிலை சில இலைகள்
  • புளி ஒரு சிறிய கோலி குண்டு அளவு
  • 1/2 தேக்கரண்டி பொடித்த வெல்லம்
  • 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
தாளிக்க
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • கடுகு சிறிதளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
Instructions
முன் தயாரிப்பு
  1. இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை
  1. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  3. ஊற வைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  4. ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மறைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும்.

  6. சுவையான இஞ்சி சட்னி தயார்.

Ginger chutney

2. அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

Ginger chutney

ginger chutney

3. ஊற வைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ginger chutney

4. ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மறைத்து வைத்துக் கொள்ளவும்.

5. சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும்.

Ridge_Gourd_Chutney

6. சுவையான இஞ்சி சட்னி தயார்.

Ginger Chutney

Leave a Reply