தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாதம். தேங்காய் சாதம் வடித்த சாதம், துருவிய தேங்காய், வேர்க்கடலை கொண்டு செய்யலாம். தேங்காய் சாதம் உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் எல்லா வகையான காய்கறி குருமா உடனும் சுவையாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கருவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும் .
பின்னர் காய்ந்த மிளகாய்களை உடைத்து சேர்க்கவும் .
துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
தாளித்த கலவையுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தை கலக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும் சுவையான தேங்காய் சாதம் தயார்.
ஊறுகாய், அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ், அல்லது காய்கறி குருமா உடன் பரிமாறலாம் .