Thengai Sadam in Tamil | தேங்காய் சாதம் | Coconut Rice in Tamil | How to make coconut rice

See this Recipe in English

தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாதம். தேங்காய் சாதம் வடித்த சாதம், துருவிய தேங்காய், வேர்க்கடலை கொண்டு செய்யலாம். தேங்காய் சாதம் உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் எல்லா வகையான காய்கறி குருமா உடனும் சுவையாக இருக்கும். 

Coconut_rice_

சுவையான தேங்காய் சாதம் செய்ய சில குறிப்புகள்

  • தேங்காய் சாதத்தை பாஸ்மதி அரிசி கொண்டும் தயாரிக்கலாம்.
  • சாதம் வடிக்கும் போது உதிர் உதிராக வடித்து கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி சமைத்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  • வேர்கடலையுடன் சிறிதளவு முந்திரிப்பருப்பு, ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
  • இளசான தேங்காய் பயன்படுத்தல் லேசான இனிப்பு சுவையுடன் தேங்காய் சாதம் சுவையாக இருக்கும்.
  • விருப்பப்பட்டால் கடைசியாக சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
  • சாதம் நன்றாக ஆறிய பிறகு பயன்படுத்தவும்.

Coconut_rice_

இதர மதிய உணவுகள்

அரிசி பருப்பு சாதம்

சீரக சாதம்

புதினா சாதம்

 தக்காளி சாதம்

காலிஃப்ளவர் சாதம்

தேங்காய் சாதம்
Prep Time
10 mins
Cook Time
10 mins
Total Time
20 mins
 
தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாதம். தேங்காய் சாதம் வடித்த சாதம், துருவிய தேங்காய், வேர்க்கடலை கொண்டு செய்யலாம். தேங்காய் சாதம் உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் எல்லா வகையான காய்கறி குருமா உடனும் சுவையாக இருக்கும். 

Course: lunch
Cuisine: Indian
Keyword: coconut rice in tamil
Ingredients
  • 2 கப் வடித்த சாதம்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1/4 கப் வேர்க்கடலை
  • கறிவேப்பிலை இலைகள் சில
  • 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
Instructions
  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

  2. கருவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும் .

  3. பின்னர் காய்ந்த மிளகாய்களை உடைத்து சேர்க்கவும் .

  4. துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

  5. தாளித்த கலவையுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.

  6. பின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தை கலக்கவும்.

  7. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும் சுவையான தேங்காய் சாதம் தயார்.  

  8. ஊறுகாய், அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ், அல்லது காய்கறி குருமா உடன் பரிமாறலாம் . 

See this Recipe in English

செய்முறை

1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

Coconut_rice

2. கருவேப்பிலை மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும் .

3. பின்னர் காய்ந்த மிளகாய்களை உடைத்து சேர்க்கவும் .

4. துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

5. தாளித்த கலவையுடன் உப்பு சேர்த்து கலக்கவும் .

6. பின்னர் வடித்து ஆற வைத்த சாதத்தை கலக்கவும்.

7. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும் சுவையான தேங்காய் சாதம் தயார்.

8. ஊறுகாய் அப்பளம் உருளைக்கிழங்கு பொரியல் சிப்ஸ் அல்லது காய்கறி குருமா உடன் பரிமாறலாம் .

Coconut_rice_

Leave a Reply