பாம்பே டோஸ்ட்

பாம்பே டோஸ்ட் முட்டை மற்றும் பிரட்டை கொண்டு தயாரிக்கப்படும் காலை நேர உணவு, இதனை நீங்கள் ஃப்ரென்ச் டோஸ்ட் என்றும் சொல்லலாம்.  பாம்பே டோஸ்ட் சுவையான, ஆரோக்கியமான மற்றும் விரைவில் செய்யக் கூடிய உணவு வகை.

french_toast

நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்,  பாம்பே டோஸ்ட் மதிய உணவாக லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம்.  சுலபமான மற்றும் சுவையான பாம்பே டோஸ்ட் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

  • 4 பிரட் துண்டுகள்
  • 2 முட்டை
  • ¼ கப் பால்
  • 2 தேக்கரண்டி சர்க்கரை
  • சிறிதளவு உப்பு
  • ¼ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
  • 2 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி பட்டை பொடி

பாம்பே டோஸ்ட் செய்முறை

1. ஒரு அடி தட்டையான பாத்திரத்தில் 1 முட்டையை உடைத்து சேர்க்கவும்.

french_toast

2. அதனுடன்  பால், பட்டை பொடி, வெண்ணிலா எசன்ஸ், உப்பு, மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது அதனை நன்கு கலக்கி விடவும்.

4. அதில் ஒரு பிரெட் துண்டை சேர்க்கவும், இரண்டு புறமும் பிரட்டி எடுக்கவும்.

5. ஒரு தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய்  தடவி சூடாக்கவும்,  அதனுடன் முட்டையில் ஊறவைத்து பிரட் துண்டை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

6. சிறிது நேரத்திற்குப் பின் திருப்பி போடவும்.

7. இருபுறமும் பொன்னிறமானதும், சிறிதளவு தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் வைத்து பரிமாறலாம்.

 

  • இந்த கலவையை வைத்து 2  பாம்பே டோஸ்ட் செய்யலாம், மீதமுள்ள பொருட்களை கலந்து அனைத்து  பிரெட்களையும் வைத்து பாம்பே டோஸ்ட் செய்து முடித்து விடவும்.
  • மொத்தமாக கலைந்து வைத்து ஒவ்வொரு பிரெட்டாக போட்டு எடுத்தால்   இரண்டு அல்லது மூன்று பிரெட்களுக்குப் பிறகு வரும் பாம்பே டோஸ்ட்   சுவையாக இருக்காது.

Leave a Reply