தென்னிந்தியாவின் சுவையான காலை உணவு குழிப்பணியாரம் இட்லி தோசை மாவு கொண்டு செய்யப்படுகிறது. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ஆகியவை தாளித்து சேர்க்கப்படுகிறது. குழிப்பணியாரம் தோசை போல மேலே மொறுமொறுப்பாகவும் இட்லி போல உள்ளே மென்மையாகவும் இருக்க கூடியது. எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். குழிப்பணியாரம் எல்லா வகை சட்னி மற்றும் சாம்பாருடன் சுவையாக இருக்கும்.
குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
சின்ன வெங்காயம் / பெரியவெங்காயம் – ½ கப் பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
குழி பணியாரம் செய்முறை
தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்
1.ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
2.பின்னர் கறிவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3.அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
4.பின்னர் இந்த கலவையை மாவுடன் சேர்க்கவும், அதனுடன் கொத்தமல்லி இலைகளில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
5.பின்னர் குழிப்பணியாரக் கல்லை சூடாக்கவும், அதில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
6.பின்னர் கலந்து வைத்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி மிதமான சூட்டில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைக்கவும்.
7.அதனை திருப்பி போட்டு மேலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மூடாமல் வேக வைக்கவும்.
8.சுவையான குழி பணியாரம் தயார். இதனை சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறலாம்.
Super recipes
Thank you