எலுமிச்சை சாதம் தென் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சாத வகை. இது தாளித்த கலவையுடன் எலுமிச்சம்பழ சாறு மற்றும் வடித்த சாதம் சேர்த்து செய்யப்படுகிறது. எலுமிச்சை சாதத்தை நாம் விரைவில் செய்து விடலாம். காலை நேரத்தில் விரைவாக செய்யக் கூடிய உணவு. உணவு டப்பாக்களுக்கு ஏற்றது, மற்றும் புதிதாக சமையல் செய்வதற்கு ஏற்ற உணவு வகை. சுவையான எலுமிச்சை சாதத்தை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்
வடித்த சாதம் – 2 கப்
எலுமிச்சம்பழம் – 1
வேர்கடலை – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – ½ தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
2.அதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.
3.கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கலக்கவும்.
4. அதனுடன் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
6. ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிடவும், உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.
7. கலவையை நன்கு கலந்து விட்டு உப்பு சுவை பார்த்து கொள்ளவும்.
8. அதனுடன் வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
9. சுவையான எலுமிச்சை சாதம் தயார்.