கமகமக்கும் புதினா சட்னி

Mint_tomato_chutney

புதினா சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும்.  புதினா சட்னி பலவிதமாக செய்யலாம்,  புதினா மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம் அல்லது புதினாவுடன் வரமிளகாய், மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து செய்யலாம்.

Mint_tomato_chutney

நான் இப்பொழுது புதினாவை வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வித்தியாசமான முறையில் செய்யும் சட்னியை பகிர்ந்துகொள்கிறேன். சுவையான புதினா சட்னியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கட்டு புதினா
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளிப் பழம்
  • 6 சிவப்பு மிளகாய்/காரத்திற்கேற்ப
  • 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

 தாளிக்க தேவையான பொருட்கள்

  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • ½ தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை

புதினா சட்னி செய்முறை

1. ஒரு கட்டு புதினாவை ஆய்ந்து இலைகளை தனியே அடுத்து  அலசி வைக்கவும், சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்,  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

3. பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.

4. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.

5. அதனுடன்  பிரஷ்ஷான புதினா இலைகள் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

6. அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

Mint_tomato_chutney

7. அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஆற வைக்கவும்.

Mint_tomato_chutney

8. பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும் .

Mint_tomato_chutney

9. பின்னர் ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Kadapaa

 

10. தாளித்த கலவையை சட்னியுடன் கலந்து சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.

Leave a Reply