நீர் கொழுக்கட்டை

நீர் கொழுக்கட்டை ஒரு சுவையான, ஆரோக்கியமான இனிப்பு வகை.  கொழுக்கட்டை கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அது தவிர மாலை நேர  பண்டமாகவும் செய்யலாம். நீர் கொழுக்கட்டை அல்லது நீர் உருண்டை அரிசி மாவு, வெல்லம், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  சுவையான நீர்  கொழுக்கட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 நீர் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்

  • ஒரு கப் அரிசி மாவு
  • கால் கப் வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • ஒரு தேக்கரண்டி எண்ணெய்

செய்முறை

  1. ஒரு  வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  1. தண்ணீர் கொதிக்கும் போது, அதில் ஒரு கப் அளவு அரிசி மாவு சேர்க்கவும்.

  1. அதனை ஒரு கரண்டியால் கிளறிவிடவும். மாவு திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

  1. ஓரளவு ஆறியதும் கைகளால் மென்மையாக பிசைந்து வைக்கவும்.

  1. அதனை சிறு உருண்டைகளாக உருட்டவும்

  1. வெல்லத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதனை அரிசி மாவு உருண்டைகளுக்குள் ஒன்றாக வைத்து மீண்டும் உருட்டி வைக்கவும்.

  1. இட்லித் தட்டு அல்லது ஸ்டீமர் தட்டில் வைக்கவும்.

  1. 8 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.  சுவையான நீர் கொழுக்கட்டை தயார்.

Leave a Reply