See this Recipe in English
பூரி செய்வது எப்படி ? பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட வைத்த பாலில் சர்க்கரை கலந்து பூரிகளை ஊற வைத்து பால் பூரி செய்யலாம்.
சுவையான பூரி செய்ய சில குறிப்புகள்
- சரியான தன்மையில் மாவை தயாரிப்பது உப்பலான பூரியைப் பெறுவதற்கான முக்கிய பகுதியாகும். பூரிக்கு மாவு சப்பாத்தியை விட கெட்டியாக இருக்க வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக காய்ந்திருந்தால், பூரியை உருட்டும்போது வெடிப்பு விழும்.
- மாவை பிசைந்தும், உடனடியாக பூரி போட வேண்டும், சப்பாத்தி போன்று சிறிது நேரத்திற்கு பிறகு செய்தல், எண்ணெய் குடிக்கும்.
- பூரியை கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் செய்யலாம்.
- பூரியுடன் சிறிது ரவை கலந்தால் பூரி முறுமுறுப்பாக இருக்கும் ஓமம் அல்லது சீரகம் சேர்த்தும் செய்யலாம்.
- பூரி செய்ய மிதமான தீயை விட சற்று கூடுதலாக இருக்கு வேண்டும், போட்டவுடன், பூரி மேலே உப்பி வர வேண்டும்.
- மாவை உருட்டும்போது, அது ரொட்டியை விட சற்று தடிமனாக இருக்க வேண்டும். பூரியை மிகவும் தடிமனாக உருட்டினால், சில சமயங்களில் அது உப்பி வர முயற்சிக்கும் போது, துளைகள் தோன்றி, உப்பி வருவதை நிறுத்தும். பூரியை மிக மெல்லியதாக உருட்டினால், பூரி தட்டையாக இருக்கும்.
- பூரியை தேய்க்கும் போது மாவு தொட்டு தேய்க்காமல், எண்ணை தொட்டு தேய்க்கவும், இவ்வாறு செய்வதால், இது கோதுமை மாவு எண்ணெயின் கீழ் படிந்து விடாமல் தடுக்கும்.
இதர டிபன் வகைகள்
சில்லி மசாலா இட்லி
பஞ்சாபி பட்டூரா
பாசிப்பருப்பு இட்லி
ரவா இட்லி
சில்லி இட்லி
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது.
- 1 கப் கோதுமை மாவு
- 2 தேக்கரண்டி ரவை
- தேவையான அளவு உப்பு
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
-
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை கலக்கவும், 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் கலந்து விடவும், சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும்.
-
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும் . உருட்டிய மாவை பூரிக்கட்டை கொண்டு வட்டவடிவமாக தேய்க்கவும். பூரி தேய்க்கும்போது ஒட்டாமல் வருவதற்கு சிறிது சமையல் எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் பூரியை போட்டதும், அது உப்பி மேலெழும்பி வரும், அதனை மென்மையாக கரண்டியால் அழுத்தவும். பின்னர் பூரியை கவனமாக திருப்பி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
-
சூடான பூரியை உருளைகிழங்கு மசாலா உடன் பரிமாறலாம்.
See this Recipe in English
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ரவை கலக்கவும், 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் கலந்து விடவும், சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசையவும்.
2. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும் .
3. உருட்டிய மாவை பூரிக்கட்டை கொண்டு வட்டவடிவமாக தேய்க்கவும். பூரி தேய்க்கும்போது ஒட்டாமல் வருவதற்கு சிறிது சமையல் எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
5. எண்ணெயில் பூரியை போட்டதும், அது உப்பி மேலெழும்பி வரும், அதனை மென்மையாக கரண்டியால் அழுத்தவும்.
6. பின்னர் பூரியை கவனமாக திருப்பி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
7. சூடான பூரியை உருளைகிழங்கு மசாலா உடன் பரிமாறலாம்.