Mysore Bonda Recipe | மைசூர் போண்டா | Mysore Bonda in Tamil | Easy Bonda recipe

See this Recipe in English

மைசூர் போண்டா விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான, மொறுமொறுப்பான மாலை நேர பலகாரம். மைசூர் போண்டா மைதா மாவு, அரிசி மாவு, தயிர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  மைசூர் போண்டா விற்கு மற்ற போண்டா வகைகளைப் போல மாவரைக்க அல்லது காய்கறிகள் நறுக்க தேவையில்லை. இதனை  மிகவும் சுலபமாக செய்யலாம். 

இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்றும் முட்டை போண்டா, அவித்த முட்டையை வைத்து செய்யப்படும்.  தமிழ்நாட்டை பொருத்தவரை போண்டா என்பது உளுந்து மாவில் செய்யப்படுவதாகும். ஆனால் மைசூர் போண்டா கர்நாடகா & ஆந்திர பிரதேசத்தில் மிகவும் பிரபலம். 

 

சுவையான போண்டா விற்கு சில குறிப்புகள்

  • பொதுவாக  மைசூர் போண்டா மைதா மாமற்றும் அரிசி மாவு கொண்டு செய்யப்படுகிறது,  விருப்பப்பட்டால் மைதாமாவிற்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • மைதா மற்றும் கோதுமை மாவை சரிசமமாக கலந்து போண்டா செய்யலாம்.
  • விருப்பப்பட்டால்  பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு,  காலிபிளவர், மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மைசூர் போண்டா செய்யும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்,   இல்லையெனில் போண்டா மேல்பக்கம் கருப்பாகி உள்ளே வேகாமல் இருக்கும்.

இதர வகைகள் – சேமியா போண்டா, இட்லி மாவு போண்டா, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்,  மசாலா டீ, பர்கர் வடை, போண்டா சூப், பில்டர் காபி, தயிர் வடை, சாம்பார் வடை

See this Recipe in English

போண்டா செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1 சிறிய துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது)
  • 3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா, 1/4 கப் அரிசி மாவு, மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1 சிறிய துண்டு இஞ்சி மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

3. பின்னர் 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

4. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிகவும்  திடமான அல்லது நீர்த்துப்போன மாவாக இல்லாமல் மிதமாக கலந்து கொள்ளவும்.

5. கலந்து வைத்துள்ள மாவை மூடி 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.

6. பின்னர் மிதமான எண்ணெய் சூட்டில் சிறிது சிறிதாக கிள்ளிப் போடவும்.

7. 3-4 நிமிடங்களுக்கு பொரிக்கவும்.

8. போண்டா பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியாக எடுத்து விடலாம்.

9. சுவையான மைசூர் போண்டா தயார். 

Leave a Reply