Bread Balls with Rabdi in Tamil | பிரட் குலாப் ஜாமுன் | Bread gulab jamun recipe in Tamil

பிரெட் பால்  இன் ரப்டி இது  குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி அக்கா அவர்கள் செய்த ஒரு சுவையான இனிப்பு வகை. இதனை பிரட் குலாப் ஜாமுன் எனவும் கூறலாம். பிரெட், பால், சர்க்கரை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை. இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பிரெட் பால்  இன் ரப்டி செய்ய சில குறிப்புகள்

  • ரப்டி செய்யும் பொழுது சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • நான் முந்திரி மற்றும் பாதாம் உடைத்து சேர்த்துள்ளேன், நீங்கள் பிஸ்தா, வால்நட் போன்ற உங்கள் விருப்பப்பட்ட நட் (nuts) வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
  • குங்குமப்பூ நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • பிரட் உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொடித்துக் கொள்ளவும்.
  • உருண்டைகளை சர்க்கரைப் பாகில் ஊற வைக்கும்போது பாகு சூடாக இருக்க வேண்டும்.
  • பிரட் உருண்டைகளை சர்க்கரை பாகில் ஊற வைக்கும்போது குறைந்தது 10 நிமிடம் ஊறவைக்கவும். உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.

 பிரெட் பால்  இன் ரப்டி செய்ய தேவையான பொருட்கள்

  • பால் – 750ml
  • சர்க்கரை –  3/4 கப் – 150g
  • குங்குமப்பூ – 1   சிட்டிகை
  • உடைத்த முந்திரி/பாதாம் –  தேவையான அளவு
  • ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி
  • ப்ரெட் துண்டுகள் – 6 
  • ஸ்ட்ராபெரி( விருப்பப்பட்ட பழம்) –  பொடியாக நறுக்கியது சிறிதளவு
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

 செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பால் சேர்க்கவும்.

2. பால் பொங்கி வந்ததும் மிதமான தீயில் விட சற்று குறைவாக வைத்து கிளறவும்.

3. முக்கால் லிட்டர் பால், கால்  லிட்டருக்கும் குறைவாக வரும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

4. இப்பொழுது அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ,  உடைத்த பாதாம் முந்திரி மற்றும் 50 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

5. மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ரப்டி தயாரானதும் தனியே எடுத்து வைக்கவும்.

6. ஒரு பானில்  அரை கப் சர்க்கரை,  ஒரு கப் தண்ணீர்,  மற்றும் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

7. ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும். சர்க்கரைப்பாகு ஓரளவு கெட்டியானதும் தனியே எடுத்து வைக்கவும்.

8. ஜாமுன் செய்வதற்கு  6 பிரட் துண்டுகளை ஓரங்களை நறுக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

9. அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

10. அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

11. அதனை சிறிது சிறிதாக  உருட்டி லேசாக தட்டி கொள்ளவும்.

12. நடுவில் உடைத்த பாதாம் முந்திரி மற்றும் சிறிதளவு பழத்தை வைத்து மீண்டும் உருட்டிக் கொள்ளவும்.

 13. இதே போல எல்லா மாவிலும் வெடிப்புகள் இல்லாமல் உருட்டிக் கொள்ளவும்.

14. பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளவும்.

15. அவ்வப்போது திருப்பி போடவும்.

16. பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுத்து தயாராக வைத்துள்ள சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

17. பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

18. இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் ரப்டி ஊற்றிக் கொள்ளவும். அதன் மீது ஊற வைத்துள்ள பிரட்  ஜாமுன்களை வைத்து பரிமாறவும்.

19. சுவையான பிரட் ஜாமூன் வித் ரப்டி தயார். 

Leave a Reply