வெண்ணை முறுக்கு / பட்டர் முறுக்கு

பட்டர் முறுக்கு தீபாவளி நேரங்களில் செய்யப்படும் ஒரு சுவையான முறுக்கு  வகை. இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்னாக். பண்டிகைக் காலங்கள் தவிர மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கவும் விருந்தினர்களை உபசரிக்கவும் ஏற்றது.  நீங்களும் சுவையான பட்டர் முறுக்கு சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

பட்டர் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி மாவு
  • 1/2 கப் கடலை மாவு
  • 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 கப் வெண்ணை
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

பட்டர் முறுக்கு செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

2. கைகளால் நன்கு கலந்து விடவும்.

3. சிறிதளவு தண்ணீர் தெளித்து  மென்மையாக பிசைந்து வைக்கவும்.

4. வாணலியில் எண்ணை  சூடானதும், முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிந்துவிடவும்.

5. இரண்டு / மூன்று நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

6. சுவையான பட்டர் முறுக்கு தயார்.

Leave a Reply