Carrot Halwa in Tamil | கேரட் அல்வா | Carrot Halwa Recipe | how to make carrot halwa

கேரட் அல்வா இது வட இந்தியாவில் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இனிப்பு வகை , பஞ்சாப் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையும் கூட . திருமணம் திருவிழாக்கள் என அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இது இடம் பெறுகிறது. வட இந்தியாவில் இது Gajar ka halwa என அழைக்கப்படுகிறது.  கேரட் அல்வா துருவிய கேரட், பால், சக்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படுகிறது . பிற அல்வா வகைகளை காட்டிலும் விரைவிலும் சுலபமாகவும் செய்யக் கூடிய இனிப்பு வகை.

சுவையான கேரட் ஹல்வா செய்ய்ய சில குறிப்புகள்

  • தற்காலத்தில் கேரட் அல்வா பிரஷர் குக்கர் கொண்டு செய்யப்படுகிறது, ஆனால் கடாயில் மெதுவாக செய்யப்படும் கேரட் அல்வா சுவையானதாக கருதப்படுகிறது.
  • விருப்பப்பட்டால் பிரஷர் குக்கரில் செய்யலாம் இதே செய்முறையில் 20 அல்லது 30 நிமிடங்கள் கிளறுவதற்கு பதிலாக மூன்று சத்தம் வைத்துக் கொள்ளவும்.
  • தண்ணீர் சுண்டிய பிறகு மிதமான சூட்டில் கிளறவும். 
  • சர்க்கரை தேவைகேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • இதே அளவுகள் மற்றும் செய்முறையில் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் அல்வா செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்

  • 1 kg கப் துருவிய கேரட்
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 லிட்டர் பால்
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 8 தேக்கரண்டி நெய்
  • 2 தேக்கரண்டி பொடித்த முந்திரி மற்றும் பிஸ்தா

செய்முறை

1. அடி கனமான பாத்திரத்தில் 6 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும் அதனுடன் 1 kg துருவிய கேரட் சேர்த்து சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

2. மூடி வைத்து 25 முதல் 30 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

3. அதனுடன் 500 ml பால் சேர்த்து கிளறவும்.

4. கைவிடாமல் தொடர்ந்து கிளறவும் மேலும் மிதமான சூட்டில் அல்வா செய்வதே சிறந்தது அல்லது அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

5. பாதியாக சுண்டிய பிறகு  1 கப் சர்க்கரை சேர்க்கவும்.

6. 20 முதல் 30 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.

7. அல்வா ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது மீதமுள்ள நெய், 1  சர்க்கரை மற்றும் 1/2  தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், 2 தேக்கரண்டி பொடித்த முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு கிளறவும்.

8. சிறிது நேரத்தில் அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வருவதையும், ஊற்றிய நெய் பிரிவதையும் காணலாம்.

9. சுவையான கேரட் அல்வா தயார். இதனை சூடாகவோ அல்லது ஆறவைத்து பரிமாறலாம்.

Leave a Reply