Coconut chutney | ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி | chutney in tamil

white_chutney_

தேங்காய் சட்னி ஆரோக்கியமான தென்னிந்திய சட்னி வகை.  தேங்காய் சட்னி இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், மேலும் பஜ்ஜி, வடை சமோசா, ஆகியவற்றின் மிகவும் சுவையாக இருக்கும்.  தேங்காய் சட்னி துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மற்றும் புளி. சேர்த்து செய்யப்படுகிறது.  சில எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம். இதே முறையில் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – ½ கப்
பொட்டுக்கடலை – 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 3 / காரத்திற்கு தகுந்தாற்போல்
பூண்டுப்பல் – 1
புளி – சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிதளவு

தேங்காய் சட்னி செய்முறை

1.தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

white_chutney

2.ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், பூண்டு,  உப்பு, மற்றும் புளி சேர்த்து  அதனுடன் கால் கப் அல்லது அதைவிட குறைவாக தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

white_chutney

3.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

4.தாளித்த கலவையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

Leave a Reply