Rava Kesari | ரவா கேசரி | Rava Kesari in Tamil

ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான  இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.  இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான  இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 

ரவா கேசரி அனைவரும் அறிந்த புகழ்பெற்ற இனிப்பு வகை அதுதவிர மாம்பழ கேசரி, அன்னாசிப்பழ கேசரி, உடைத்த கோதுமை கேசரி, போன்றவையும் பிரபலம். ரவா கேசரி, ரவா அல்வாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ரவா அல்வா செய்யும்பொழுது ரவை பாலில் வேக வைக்கப்படும். தமிழ்நாட்டின் ஹோட்டல் சரவண பவன் கேசரி மிகவும் பிரபலம். இது உயர்தர நெய்யினால் செய்யப்படுகிறது. வீட்டில் செய்யும் போதும் நல்ல தரமான நெய் பயன்படுத்தும் பொழுது சுவையாக இருக்கும். டால்டா, எண்ணெய் போன்றவை பயன்படுத்தக்கூடாது.

சுவையான கேசரி செய்ய சில குறிப்புகள்

  • கேசரி செய்யும் பொழுது 1 பங்கு ரவைக்கு 1 பங்கு  நெய் சேர்த்துக் கொள்ளவும்.  கூடுதலாக நெய் சேர்க்கலாம்,  ஆனால் குறைவாக  நெய் சேர்த்தால் கேசரி சுவையாக இருக்காது.
  • 1 கப் ரவா  சேர்க்கும் பொழுது 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது 3.5 முதல் 4 வரை தண்ணீர் சேர்க்கலாம்,  இப்பொழுது கேசரி மிகவும் மென்மையாக இருக்கும்.
  • கேசரி செய்யும் பொழுது குறைவான தீயில் செய்யவும் அல்லது அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது.
  • உங்கள் சுவைக்கேற்ப கூடவோ அல்லது குறைத்தோ சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தா, போன்றவற்றையும் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்

  • ரவை – 1 கப் (200 grams)
  • சர்க்கரை – 2 கப் (400 grams)
  • நெய் – 1 கப் (200 ml)
  • ஆரஞ்சு நிறம்/ கேசரி கலர் – 1/8 தேக்கரண்டி 
  • குங்குமப்பூ  – சிறிதளவு
  • முந்திரிப் பருப்பு  – 10 அல்லது தேவைக்கேற்ப
  • உலர்ந்த திராட்சை  – 10 அல்லது தேவைக்கேற்ப
  • ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு வாணலியில் 1/4 கப் நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் 10 உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனை தனியே வைத்து விடவும்.

2. அதே வாணலியில் 1/4 கப் நெய் சேர்த்து சூடானதும் 1 கப் ரவையை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

3.4 முதல் 5 நிமிடங்களுக்கு, நல்ல மணம் வரும் வரை  வறுக்கவும்.

4. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5. வறுத்த ரவையுடன் சூடான தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கட்டியின்றி கிளறவும்.

6. ரவை வெந்ததும்  1/4 கப் நெய் சேர்க்கவும்.

6.ரவையுடன்  2 கப் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கட்டியின்றி கிளறவும்.

7. சர்க்கரை கரையும் பொழுது கைவிடாமல் நன்கு கிளறவும் அல்லது கட்டியாக வாய்ப்பு உள்ளது.

8. அதனுடன் குங்குமப் பூ, 1/4  தேக்கரண்டி பொடித்து வைத்த ஏலக்காய் சேர்க்கவும்.

9. பின்னர் 1/8 தேக்கரண்டி கேசரி கலர் சேர்த்து கிளறவும்.

12. இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

10. அதனுடன் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

11.  பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். சுவையான ரவா கேசரி தயார்.

 

 

Leave a Reply