Rava Laddu in Tamil | ரவா லட்டு | Rava laddu recipe | How to make rava laddu

ரவா லட்டு சுலபமான முறையில் செய்யக்கூடிய இனிப்பு வகை. தமிழ்நாட்டில் பொதுவாக விதவிதமாக லட்டு செய்யப்படும், பூந்தி லட்டு எல்லாவற்றிற்கும் முதன்மையானது திருமணம் முதல் கோயில் பிரசாதம் வரை அனைத்து விதமான விசேஷங்கள் மற்றும் சுப காரியங்களிலும் இந்த லட்டு வழங்கப்படுகிறது, திருநெல்வேலி அல்வா, பால்கோவா, போன்றவையும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு வகை. ரவாலட்டு 10 முதல் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு  விரைவான இனிப்பு வகை,  சுவையான ரவா லட்டு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். 

சுவையான ரவா லட்டு செய்ய சில குறிப்புகள்

  • லட்டு செய்வதற்கு நைஸ் ரவா பயன்படுத்தவும்,  ரவா பெரிதாக இருந்தால் மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும்.
  • விருப்பத்திற்கு ஏற்ப 3/4 கப் முதல் 1 1/4 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • முந்திரி திராட்சை ஆகியவற்றுடன் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, ஆகியவற்றையும் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடித்து அதன் பின்னரும் பயன்படுத்தலாம்.
  • லட்டு பிடிக்கும் போது கைகளில்  நெய் தடவிக் கொள்ளவும் அப்பொழுது தான் ஒட்டாமல் வரும்.
  • ரவாலட்டு கலவை செய்தபின்னர், அது ஓரளவுக்கு ஆறிய பின்னர் உருண்டை பிடிக்கவும் மிகுந்த சூடாக இருக்கும் பொழுது உருண்டை பிடிக்க முடியாது அதே போல ஆறிய பின்னர் உருண்டை பிடிக்க வராது.
  • இது 3 – 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.  ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
  • பால் சேர்க்கும் பொழுது வெதுவெதுப்பாக இருக்கும் பால் சேர்க்கவும்,  பாலை காய்ச்சி ஓரளவு ஆறிய பின்னர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தேங்காய் வறுக்கும் பொழுது  ஈரப்பதம் முற்றிலுமாக போகும் வரை வறுத்துக் கொள்ளவும். 

இதர இனிப்பு வகைகள் – குலாப் ஜாமுன் , இனிப்பு காஜா, கோதுமை அல்வா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், பருப்பு போளி, மோட்டிச்சூர் லட்டு, கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை பிஸ்கட், நெய் மைசூர் பாக், ஜவ்வரிசி பாயசம், பாதாம் அல்வா, ஜவ்வரிசி கேசரி, பால்கோவா, பால் கொழுக்கட்டை, சிறுதானிய பாயசம், அசோகா அல்வா, கேரட் அல்வா, பூந்திலட்டு.

 

 

ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்

  • நெய்  – 2 மேசைக்கரண்டி
  • முந்திரிப் பருப்பு –  1/4 கப்
  • உலர்ந்த திராட்சை –  1/4 கப்
  • ரவை –  1 கப்
  • சர்க்கரை –  1 கப்
  • துருவிய தேங்காய் –  1/2 கப்
  • ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி
  • பால் –  1/4 கப்

செய்முறை

1. ஒரு பேனில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. நெய் சூடானதும் 1/4 கப் முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 1/4 கப்  உலர்ந்த திராட்சை சேர்த்துக் கொள்ளவும்.

4. திராட்சை உப்பி வந்ததும் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

5. தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

6. 1 கப் ரவை சேர்த்து மிதமான சூட்டில் 5 – 6 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

7. நன்கு வறுத்த பின்னர் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

8. 2 – 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.

9. கலந்த பின்னர் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

10. அதனுடன் 1/4 கப் அளவு வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கொள்ளவும்.

11. பால் சேர்த்து கலந்த பிறகு அடுப்பை அணைத்து 5 நிமிடங்களுக்கு ஆற விடவும்.

12. ஓரளவு ஆறிய பின்னர் கைகளில் நெய் தடவி விட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

13. சுவையான ரவா லட்டு தயார்.

Leave a Reply