கொத்து பரோட்டா

கொத்து புரோட்டா மிகவும் சுவையான பரோட்டா வகை,  இது பொதுவாக ரோட்டோர கடைகளில் மிகவும் புகழ்பெற்றது.  கொத்து பரோட்டா மிகவும் எளிமையாக செய்யக்கூடியது பரோட்டா, சிக்கன் சால்னா, மற்றும் முட்டை ஆகியவற்றைக் கொண்டு எளிமையாக மற்றும் விரைவாக கொத்து பரோட்டா செய்யலாம்.


சைவகொத்து பரோட்டா காய்கறி சால்னா கொண்டு செய்யலாம். சைவகொத்துப்பரோட்டா விற்கு நீங்கள் முட்டை சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். சுவையான கொத்து பரோட்டா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

கொத்து பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்

  • 5 பரோட்டா
  • 1 பெரிய வெங்காயம்
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 1 தக்காளி
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 முட்டைகள்
  • 1 கப் சிக்கன் சால்னா

கொத்து பரோட்டா செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் பரோட்டாவை போட்டு பல்ஸ் பட்டனை அழுத்தவும்.

2. விரைவில் சிறுசிறு துண்டுகளாக்கி விடும்.

3. ஒரு அகண்ட வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.

5. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

7. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து  எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

8. இப்பொழுது பொடியாக்கி வைத்துள்ள பரோட்டாக்களை சேர்க்கவும்.

9. பரோட்டா, வெங்காயம் தக்காளி மசாலாவுடன் நன்கு கலந்ததும் நடுவில் குழி ஆக்கி அதில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்க்கவும்.

10. இப்பொழுது அதில் சிக்கன் சால்னா சேர்த்துக் கிளறவும்.

11. சுவையான கொத்து பரோட்டா தயார். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

This Post Has 3 Comments

  1. Lakshmi

    🙂🙂🙂🙂🙂Thanks for the simplified steps. Easy to prepare and taste gooooood…

  2. Lakshmi

    Thanks for the simplified steps. Easy to prepare and taste gooooood…

Leave a Reply