Roti Pizza | Pan Pizza | ஓவென் இல்லாமல் பீஸ்ஸா | Tortilla Pizza | Pizza with Chapathi | Pizza without Oven

See this Recipe in English

சப்பாத்தி பீட்ஸா  செய்வதற்கு மைதா மாவு, ஈஸ்ட், ஓவன், போன்றவை தேவையில்லை. மிகவும் சுவையான பீஸ்ஸா வீட்டிலேயே செய்யலாம். இதற்கு மாவு பிசைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் மீதமான சப்பாத்தி கொண்டு மிக மிக சுலபமாக செய்யலாம்.

சுவையான சப்பாத்தி பீட்ஸா செய்ய சில குறிப்புகள்

  • பீசா சாஸ் கடைகளில் கிடைக்கிறது அதனை பயன்படுத்தலாம்.
  • பீசா சாஸ் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம், அல்லது கடையில் கிடைக்கும் டொமேடோ கெட்சப் கொண்டு அதனுடன் உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், ஓரிகனோ, போன்றவற்றை சேர்த்து செய்யலாம்.
  • பீசா டாப்பிங்ஸ் (toppings), பலவிதமான காய்கறிகள் மற்றும் சிக்கன் போன்றவற்றை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சப்பாத்தி  பீட்ஸா செய்வதற்கு வீட்டில் செய்த சப்பாத்தி பயன்படுத்தலாம் அல்லது கடையில் கிடைக்கும் சப்பாத்தி பயன்படுத்தலாம்.
  • கிடைத்தால் இரண்டு அல்லது மூன்று சீஸ் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது  1 (mozzarella cheese) மட்டும் பயன்படுத்தலாம்.
  • மேலே பயன்படுத்தும் டாப்பிங்ஸ் போடுவதற்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் /வெங்காயம், தக்காளி, பன்னீர் சிக்கன், அன்னாசிப் பழத்துண்டுகள், காளான், குடை மிளகாய், போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸாபீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

See this Recipe in English

தேவையான பொருட்கள்

பீசா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • 5 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  •  1 தேக்கரண்டி ஓரிகனோ

பீசா செய்ய தேவையான பொருட்கள்

  • 2 சப்பாத்தி
  • 3  slice மோசரெல்லா சீஸ்
  • 2 slice செடார் சீஸ்
  • குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கியது சிறிதளவு
  • வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது சிறிதளவு
  • காளான் பொடியாக நறுக்கியது சிறிதளவு

செய்முறை

1. ஒரு சிறிய பாத்திரத்தில் 5 தேக்கரண்டி தக்காளி சாஸ், 1/4தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கவும்.

2. அதனுடன் 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள், மற்றும் 1 தேக்கரண்டி  ஓரிகனோஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

3. இப்பொழுது பீசா சாஸ்  தயாராக உள்ளது.

4. குறைவான தீயில் ஒரு அகலமான பேன் அல்லது தோசை கல்லை சூடாக்கவும்,  அதன் மேல் ஒரு சப்பாத்தியை வைக்கவும்.

5. இப்பொழுது பொடியாக நறுக்கிய 2 மோசரெல்லா சீஸ் துண்டுகளை சேர்க்கவும்.

6. அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து மெதுவாக அழுத்தவும்.

7. அதன் மேல் மெதுவாக 2 – 3 தேக்கரண்டி பீஸ்ஸா சாஸை பரப்பவும்.

8. இரண்டு துண்டுகள் செடார் சீஸ் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவவும்,  மீண்டும் ஒரு துண்டு மோசரெல்லா சீஸ் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவவும், லேசாக அழுத்தி விடவும். 

9. தயாராக வைத்துள்ள, நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாய், காளான், மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பரவலாக தூவவும்.

10. இப்பொழுது மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைக்கவும்.

11. சுவையான சப்பாத்தி பீசா தயார்.

Leave a Reply