Moong Dal Idli in Tamil | பாசிப்பருப்பு இட்லி | Idli without Rice | Pasiparuppu Idli

பாசிப்பருப்பு இட்லி வழக்கமான இட்லி இருந்து மாறுபட்டு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவது, அதேசமயத்தில்  மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். உடல் எடையை  குறைக்க விரும்புவர்கள் வழக்கமான உணவுகளை தவிர்த்து சத்தான அதே சமயத்தில் கேலரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்,  பாசிப்பருப்பு இட்லி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதனை செய்து சாப்பிடலாம். இதனை புளிக்க வைக்க தேவையில்லை பாசிப்பருப்பை மட்டும் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவரைத்து உடனே இட்லி செய்யலாம்.  பஞ்சு போன்ற பாசிப்பருப்பு இட்லியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்ய சில குறிப்புகள்

  1. தரமான பாசிபருப்பு எடுத்துக் கொள்ளவும்.
  2. இரண்டு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளலாம்.
  3. கேரட் கேரட் மற்றும் இஞ்சியுடன் நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. லேசான புளிப்பு சுவைக்கு கால் கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
  5. Eno அவசியம் சேர்க்க வேண்டும்,  அப்பொழுதுதான் இட்லி மென்மையாக வரும்.

பாசிப்பருப்பு இட்லி செய்ய தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – 1  கப் – 200g
  • சமையல் எண்ணெய் –  1 தேக்கரண்டி
  • கடுகு –  1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை –   சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 3 
  • பெருங்காயத்தூள் –  1/4 தேக்கரண்டி
  • துருவிய கேரட் –  1/4 கப்
  • கொத்தமல்லி –  சிறிதளவு
  • இஞ்சி –  1 துண்டு
  • உப்பு –  தேவையான அளவு
  • Eno –  1 தேக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
  2. அதனை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. ஊறிய பின்னர்  தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 3 பச்சை மிளகாய்  ( பொடியாக நறுக்கியது) சேர்த்துக் கொள்ளவும்.
  5. அதனுடன் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து  வறுத்துக்கொள்ளவும்.
  6. பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் தாளித்தவற்றை சேர்க்கவும்.
  7. அதனுடன் கால் கப் துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  8. அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் மற்றும் இந்த மாவில் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலக்கவும்.
  9. பின்னர் ஒரு தேக்கரண்டி Eno  மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  10. இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள  மாவில் இட்லி ஊற்றவும்.
  11. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.
  12. மிதமான சூட்டில் பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  13. வெந்த பிறகு tooth pick  வைத்து குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி தயார் அல்லது மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  14. சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.

2. அதனை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

3. ஊறிய பின்னர்  தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.

4. நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5. பின்னர் ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 3 பச்சை மிளகாய்  ( பொடியாக நறுக்கியது) சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து  வறுத்துக்கொள்ளவும்.

7. பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் தாளித்தவற்றை சேர்க்கவும்.

8. அதனுடன் கால் கப் துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

9. அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் மற்றும் இந்த மாவில் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலக்கவும்.

10. பின்னர் ஒரு தேக்கரண்டி Eno  மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

11. இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள  மாவில் இட்லி ஊற்றவும்.

12. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

13. மிதமான சூட்டில் பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.வெந்த பிறகு tooth pick  வைத்து குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி தயார் அல்லது மேலும் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

14. சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 

Leave a Reply