மஷ்ரூம் பிரியாணி /  காளான் பிரியாணி

mushroom_rice

மஸ்ரூம் / காளான்  பிரியாணி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகை.  காளான் பிரியாணியை நீங்கள் சுலபமான முறையில் பிரஷர் குக்கரில் செய்யலாம். காளான் பிரியாணி உருளைக்கிழங்கு வருவல்,  தயிர் பச்சடி,  வெள்ளரிக்காய் பச்சடி,  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  நீங்களும் ஆரோக்கியம் நிறைந்த காளான் பிரியாணியை செய்து சுவைத்து மகிழுங்கள்.

mushroom_rice

காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்.

  • காளான் /  மஷ்ரூம் (நறுக்கியது) – 300 கிராம்
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பிரிஞ்சி இலை – 1
  • லவங்கம் – 1
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 3
  • வெண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • புதினா இலைகள் சிறிதளவு
  • சிவப்பு மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
  • மல்லி தூள் – ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 2
  • பாஸ்மதி அரிசி – 1 கப்

காளான் பிரியாணி செய்முறை

1.பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

2.ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில்  வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

mushroom_rice

3.பின்னர் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

mushroom_rice

4.பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

mushroom_rice

5.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6.அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் ஆகியவற்றை சேர்க்கவும்.

mushroom_rice

7.பின்னர்  மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு, மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

mushroom_rice

8.பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வேக வைக்கவும்.

mushroom_rice

mushroom rice

9.அதனுடன் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.

mushroom rice

10.பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கலக்கவும்.

11.அதனுடன் 1 கப் அரிசிக்கு 1 ¼ கப் வீதம் தண்ணீர் சேர்க்கவும்.

12.பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வைக்கவும் அல்லது  அரிசி மென்மையாகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.

13.சுவையான காளான் பிரியாணி தயார்.

Leave a Reply