பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை, இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம் தவிர பிசிபேளாபாத், வாங்கிபாத் மற்றும் தக்காளி சாதத்துடனும் சுவையாக இருக்கும்.  பாகற்காய் வறுவல் செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.

Pavakka_fry

 

பாகற்காய் வறுவல்
Prep Time
20 mins
Cook Time
15 mins
Total Time
35 mins
 
Ingredients
தேவையான பொருட்கள்
  • 3 பாகற்காய்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள்
  • சிறிதளவு மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • எண்ணெய் வறுக்க தேவையான அளவு
  • 1/4 கப் புளித்த மோர்
  • தேவையான அளவு உப்பு
Instructions
செய்முறை
  1. பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி விதைகளை நீக்கி விடவும்.

  2. நறுக்கிய பாகற்காய் புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

  3. பின்னர் பாகற்காய் துண்டுகளை பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும் பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  5. கலவையை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர், சிறிதளவு எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  6. சுவையான பாகற்காய் வறுவல் தயார்.

செய்முறை

1. பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி விதைகளை நீக்கி விடவும்.

2. நறுக்கிய பாகற்காய் புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

3. பின்னர் பாகற்காய் துண்டுகளை பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Pavakka_fry

4. அதனுடன் உப்பு,  மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.

Pavakka_fry

5. பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

6. கலவையை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர்,  சிறிதளவு எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

Pavakka_fry

Pavakka_fry

7. சுவையான பாகற்காய் வறுவல் தயார்.

Pavakka_fry

Leave a Reply