See this Recipe in English
கொண்டைக்கடலை சுண்டல் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யப்படும் அதி விசேஷமான பிரசாதம். இது வெள்ளை கொண்டைக் கடலை அல்லது கருப்பு கொண்டைக்கடலை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான கொண்டைக்கடலை சுண்டல் நீங்களும் செய்து விநாயகர் அருளை பெறுங்கள்.
சுவையான கொண்டைக்கடலை சுண்டல் செய்ய சில குறிப்புகள்
- கொண்டை கடலையை குறைந்தது 8 மணி நேரம் முதல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி வேக வைக்கவும். இதன்மூலம் சத்துகள் குறையாமல் இருக்கும்.
- சாதாரண பாத்திரம் பயன்படுத்துவதற்கு பதிலாக பிரஷர் குக்கரை பயன்படுத்தும் பொழுது கொண்டைக்கடலை மென்மையாக வேகும்.
இதர வகைகள்
மணி கொழுக்கட்டை
ராகி பிடி கொழுக்கட்டை
இனிப்பு பிடி கொழுக்கட்டை
தேங்காய் பூரண கொழுக்கட்டை
எள்ளு பூரண கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
எள்ளு உருண்டை
பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம்
தேவையான பொருட்கள்
- கொண்டைக்கடலை – 1 கப்
- சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- காய்ந்த மிளகாய் – 1
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- துருவிய தேங்காய் – ¼ கப்
செய்முறை
1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. ஊறிய பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் போடவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
3. 5 விசில் வைத்து வேக வைக்கவும் அல்லது மென்மை ஆக வேகும் வரை வைக்கவும். பின்னர் பிரஷர் குக்கரை திறந்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
4. ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
5. எண்ணெய் சூடானதும் ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
6. இதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
7. பின்னர் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை சேர்த்து கொள்ளவும்.
8. கடைசியாக ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும்.
9. சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.