நெய்யப்பம் | Sweet Appam recipe in tamil | Sweet paniyaram

நெய்யப்பம் கேரளாவின் பாரம்பரிய மிக்க உணவு வகை இது நைவேத்தியமாக/ பிரசாதமாக கடவுளுக்கு படைக்கப்படுகிறது மேலும் கோயில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கேரளாவின் பாரம்பரிய மிக்க நெய்யப்பம் பச்சரிசி பள்ளம் கனிந்த வாழைப்பழம் நெய்யில் வறுத்த ஏலக்காய் தேங்காய் ஏலக்காய் பொடி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது இது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது,  அதுதவிர குழந்தைகளுக்கு கொடுக்கவும் சிறந்த உணவாகும். நெய்யப்பம் தமிழ்நாட்டிலும் பிரபலமான உணவு கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் நெய்யப்பம் செய்யப்படுகிறது.

பாரம்பரிய நெய்யப்பம் செய்ய, பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் வெல்லம், கனிந்த வாழைப்பழம், ஏலக்காய், ஆகியவற்றை சேர்த்து அரைத்து சூடான எண்ணெயில் பொரிக்க வேண்டும்.

ஆனால் இந்த நெய்யப்பம் செய்ய மாவு ஊற வைத்து அரைக்க தேவையில்லை. இது அரிசி மாவு, கோதுமை மாவு, பழுத்த வாழைப் பழம், வெல்லம், மற்றும் ஏலக்காய் பொடி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம். இதனால்  அப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். நெய்யில் பொரிப்பதற்கு பதிலாக நாம் அப்பகாரா  அல்லது பணியாரக் கல்லில் இதனை சுட்டு எடுக்கலாம். நெய்யில் பொரித்த அதே சுவை இருக்கும். 

குறிப்புகள்

  • அப்பம் செய்யும் பொழுது இதே செய்முறையில் வாழைப்பழம் சேர்க்காமலும் செய்யலாம்.
  • அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவு, வாழைப்பழம், வெல்லம், ஆகியவற்றை மட்டும் கொண்டு அப்பம்  செய்யலாம்.
  • அரிசி மாவிற்கு பதிலாக மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம். இது மேலும் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
  • துருவிய  தேங்காய்க்கு பதிலாக நீங்கள் பொடியாக நறுக்கிய தேங்காயை நெய்யில் வறுத்து பயன்படுத்தலாம். அது சுவையை கூட்டும்.
  • ஆப்ப சோடா அல்லது பேக்கிங் சோடா நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.

 

நெய்யப்பம் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி மாவு
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் வெல்லம் துருவியது
  • 1/2 கப் தேங்காய்
  • 2 பழுத்த வாழைப்பழங்கள்
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  • 1/4 கப் நெய்
  • 1/8 தேக்கரண்டி சமையல் சோடா

நெய்யப்பம் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில்  1/2 கப் துருவிய வெல்லம் சேர்த்து அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும், வெல்லம் கரையும் வரை வைக்கவும்.

2. மற்றொரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவு மற்றும் 1/4 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும்.

3. பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.

4. அதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய், மற்றும் 2 பழுத்த வாழைப்பழங்கள் சேர்த்து கலக்கவும்.

5. பின்னர் 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், மற்றும் 1/8 தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.

5. நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்,  மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6. பின்னர்  பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.

7. பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை சேர்க்கவும்.

8. 2 முதல் 3  நிமிடங்களுக்கு பின்னர் அதனை திருப்பி போடவும்.

9. இரண்டு புறமும் மென்மையாக வெந்த பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான இனிப்பு பணியாரம் அல்லது நெய்யப்பம் தயார்.

 

Leave a Reply