தக்காளி குருமா

tomato_kurma

தக்காளி குருமா இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பூரியுடன் சுவையாக இருக்கும்,  வழக்கமான சட்னி, சாம்பார் தவிர இதுபோன்ற வித்தியாசமான குருமா இட்லி, தோசைக்கு தனி சுவை தரும். தக்காளி குருமா வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் தேங்காய் விழுது ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான தக்காளி குருமா வகை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

tomato_kurma

தக்காளி  குருமா செய்ய தேவையான பொருட்கள்

  • 1 பழுத்த தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • சிறிதளவு புதினா
  • சிறிதளவு கொத்தமல்லி
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்

அரைக்க தேவையான பொருட்கள்

  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 2 தேக்கரண்டி பொட்டுகடலை
  • 1 தேக்கரண்டி கசகசா

தக்காளி குருமா செய்முறை

1. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

tomato_kurma

2. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

tomato_kurma

3. பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கலக்கவும்.

tomato_kurma

4. அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

tomato_kurma

5. இப்பொழுது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

tomato_kurma

6. தக்காளி வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

7. அதனுடன் 1/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்களுக்கு மூடி வைத்து கொதிக்க விடவும்.

tomato_kurma

8. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

tomato_kurma

9. குருமா நன்கு கொதித்து வந்ததும்,  அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

tomato_kurma

10. சுவையான தக்காளி குருமா தயார்.

Leave a Reply