Egg Drop Curry in Tamil | உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு | Udaitha Muttai Kuzhambu

See this Recipe in English

உடைத்த முட்டை குழம்பு  இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை.  சுவையான உடைத்து ஊற்றி குழம்பை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான உடைத்த முட்டை குழம்பு செய்ய சில குறிப்புகள்

  • பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேங்காய் விழுது விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது அதற்கு பதிலாக 1 முட்டையை உடைத்து நன்றாக அடித்து விட்டு அதன் பின்னர் குழம்பில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
  • முட்டையை உடைத்து ஊற்றிய பின்னர் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
  • குழம்பில் ஊற்றி முட்டைகள் வெந்த பின்னர் தேவைப்பட்டால் முட்டைகளைத் திருப்பி போட்டு 2 – 3 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம்.
  • தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சிறுதுண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம்.

இதர சைவ குருமா வகைகள் – சால்னா,  சோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவிமுட்டை குழம்பு.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • சமையல் எண்ணெய் – 3  தேக்கரண்டி
  • சோம்பு/ பெருஞ்சீரகம் – ½  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –  சிறிதளவு
  • பச்சை  மிளகாய் – 4
  • பெரிய வெங்காயம் – 2 
  • இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை-  சிறிதளவு
  • தக்காளி – 2 
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள்  தூள் – ½  தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • கரம்  மசாலா – ½  தேக்கரண்டி

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் – 3  தேக்கரண்டி
  • சோம்பு – ½  தேக்கரண்டி 

செய்முறை

1. ஒரு பேனில் 3  தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. எண்ணெய் சூடானதும் ½  தேக்கரண்டி சோம்பு,  கருவேப்பிலை சிறிதளவு,  4 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். 

3. சோம்பு, கருவேப்பிலை, ஆகியவை பொரிந்த பிறகு, 2  பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

4. வெங்காயம்  ஓரளவு வதங்கியதும் 1  தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

5. இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்,  பின்னர் இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் அரைத்து  சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, ½  தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

7. தக்காளி நன்றாக வதங்கி சுருண்டு வந்தவுடன், 1  தேக்கரண்டி மிளகாய் தூள், 2   தேக்கரண்டி மல்லித்தூள், ½  தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 8. ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

9. ஒரு மிக்ஸி ஜாரில் 3  தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

 10. அதனுடன் ½  தேக்கரண்டி சோம்பு சேர்க்கவும்.

11. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

12. குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பின்னர்,  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும்.

 13. இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

14. 4 முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும்.

15. மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

16. லேசாக கிளறி விட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

17. சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார். 

Leave a Reply