ரசம் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்திய உணவு வகை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் தினசரி செய்யக்கூடிய உணவு. ரசத்தில் பல வகைகள் உள்ளன, தக்காளி ரசம், மைசூர் ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், மற்றும் எலுமிச்சை ரசம். வீடே மணக்கும் தக்காளி ரசம் செய்வது மிகவும் சுலபமானது நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி – 2
ரசப் பொடி – 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
பூண்டு பூண்டு பற்கள் – 5 (நசுக்கியது)
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நெய் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
2. அதனுடன் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
4. அதனுடன் ரசப்பொடி சேர்த்து கலக்கவும்.
5. மஞ்சள் தூள், உப்பு, மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கவும்.
6. பின்னர் புளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
7. அதனுடன் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
8. பின்னர் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
9. அதனுடன் நெய் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
10. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
11. சுவையான தக்காளி ரசம் தயார்.