மாங்காய் பச்சடி தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகை. மாங்காய் பச்சடி பொதுவாக தமிழ் வருடப்பிறப்பன்று செய்யப்படுகிறது.அதைத் தவிர புளிப்பு மாங்காய் கிடைக்கும் எல்லா நேரங்களிலும் இதை செய்யலாம்.
மாங்காய் பச்சடி எந்த வகையான புளிப்பு மாங்காய் உடனும் செய்யலாம். மாங்காய் பச்சடி தமிழ் வருடப்பிறப்பு அன்று மட்டும் வேப்பம்பூ சேர்த்து தாளிக்க படுகிறது நீங்கள் விருப்பப்பட்டால் ஒவ்வொரு முறை செய்யும் போதும் வேப்பம்பூ சேர்த்து செய்யலாம். மாங்காய் பச்சடி செய்முறை விளக்கப் படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.
- 1 மாங்காய்
- 100 கிராம் வெல்லம்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
-
மாங்காயை கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம் அல்லது மெல்லியதாக சீவி கொள்ளலாம்.
-
வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
-
சிறிய வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தனியே வைக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதில் மாங்காயை சேர்த்து கொதிக்கவிடவும்.
-
அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
-
பின்னர் அதனுடன் பொடித்து வைத்த வெல்லம் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும் .
-
தற்பொழுது அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும் .
-
பின்னர் தாளித்த கலவையை சேர்த்து, கிளறி இரக்கவும்.
-
சுவையான மாங்காய் பச்சடி தயார்.
முன் தயாரிப்பு
1. மாங்காயை கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம் அல்லது மெல்லியதாக சீவி கொள்ளலாம்.
2. வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
3. சிறிய வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தனியே வைக்கவும்.
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதில் மாங்காயை சேர்த்து கொதிக்கவிடவும்.
2. அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
3. பின்னர் அதனுடன் பொடித்து வைத்த வெல்லம் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும் .
4. தற்பொழுது அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும் .
5. பின்னர் தாளித்த கலவையை சேர்த்து, கிளறி இரக்கவும்.
6. சுவையான மாங்காய் பச்சடி தயார்.