Vanilla cake in Tamil | ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக் | Cake in tamil | Vanilla Cake without oven | Vanilla cake recipe

See this Recipe in English

வெண்ணிலா கேக் மென்மையான சுவையான வெண்ணிலா கேக் ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம். இது செய்வது மிகவும் சுலபம். மேலும் எல்லாவிதமான கேக் டிசைன்களும் இதில் செய்யலாம். வெண்ணிலா கேக் செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய கேக்.

 சுவையான கேக் செய்ய சில குறிப்புகள்

  • கேக் செய்ய முட்டை அடிக்கும் பொழுது நீங்கள் whisk-ல் கலக்கி கொள்ளலாம் அல்லது எலெக்ட்ரிக் beater கொண்டு அடித்துக் கொள்ளலாம்.
  • முட்டை பயன்படுத்தும் பொழுது  பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே பயன்படுத்த வேண்டாம். இரண்டு மணி நேரம் முன்பு எடுத்து வைக்கவும், கேக் செய்ய முட்டை ஜில்லென்று இருக்கக் கூடாது.
  • சாக்லேட் சிப்ஸ், டூட்டி ப்ரூட்டி, ஆகியவற்றையும் சேர்த்து செய்யலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
  • இதே முறையில் ஓவனில் வெண்ணிலா கேக் செய்யலாம். பாத்திரத்தில் அல்லது ஓவனில் எதில் செய்தாலும் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.
  • கேக் செய்வதற்கு அகலமான பாத்திரம் பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லது பிரஷர் குக்கரின் washer எடுத்துவிட்டு பயன்படுத்தலாம்.
  • கேக் செய்யும் பொழுது தீயை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளவும் அல்லது கரிந்து போவதற்கு வாய்ப்புள்ளது.

இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்,  முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்.

 

 

See this Recipe in English

 கேக் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு 
  • 1 கப் சர்க்கரை
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
  • 4 முட்டை
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 4 தேக்கரண்டி உருகிய வெண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி உப்பு

 வெண்ணிலா கேக் செய்முறை

1. 4 முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதனை ஒரு whisk கொண்டு அடித்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் ஒரு கப் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

3. பின்னர் மீதமுள்ள சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து முட்டை வெள்ளை நிறமாகும் வரை அடித்துக் கொள்ளவும்.

4. 1 கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/4 தேக்கரண்டி உப்பு, ஆகியவற்றை சலித்து அடித்து வைத்துள்ள முட்டை கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனை ஒரு கரண்டி கொண்டு மெதுவாக கிளறி விடவும்.

6. மாவு முட்டை ஆகியவை நன்கு கலந்தவுடன் 4 தேக்கரண்டி உருகிய வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

 7. மெதுவாக கிளறிக் கொள்ளவும் இப்பொழுது கேக் செய்ய மாவு தயாராக உள்ளது.

8. இப்போது அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து  அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வைக்கவும் இதுவே நீங்கள்  ஓவனில் செய்வதாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸ் / 360 டிகிரி ஃபாரன்ஹீட் preheat செய்து கொள்ளவும்.

9. இப்பொழுது ஆறு இன்ச் அகலம் உள்ள பாத்திரத்தில் உள்ளே எண்ணெய் தடவி மேலே சிறிதளவு மாவு போட்டுக்கொள்ளவும் மாவை எல்லாப்பக்கமும் படுமாறு கோட்டிங் செய்யவும்.

 10. இப்போ நாம் தயாராக வைத்துள்ள கேக் மாவை பாத்திரத்தில் சேர்க்கவும். அதனை அடுப்பில் பாத்திரத்தினுள் வைத்து மூடவும்.

11. குறைவான தீயில் 45 முதல் 50 நிமிடங்களுக்கு வைக்கவும். இதுவே நீங்கள் ஓவனில் செய்வதாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸில் அல்லது 360 டிகிரி ஃபாரன்ஹீட் 45 முதல் 50 நிமிடம் வேக வைக்கவும்.

12. 50 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு சிறிய குச்சி கொண்டு  கேக்கை குத்தவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது.

 13. சுவையான மென்மையான வெண்ணிலா கேக் தயார்.

Leave a Reply