Eggless Chocolate Cake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் | Chocolate cake

See this Recipe in English

முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் இது மிகவும் மென்மையான மற்றும் சுவையானது. இதற்கு முட்டை, வெண்ணை, கண்டன்ஸ்டு மில்க், போன்றவை தேவை இல்லை. மேலும் ஓவன் இல்லாமல் செய்யலாம்.  சாக்லேட் கேக் செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் உள்ளது. இது அடிப்படையான செய்முறை. இதுபோன்ற கேக் செய்து மேலே பிரஷ் கிரீம் சேர்த்து விதவிதமான டெக்கரேஷன் செய்யலாம்.

சாக்லேட் கேக் பலவிதமாக செய்யப்படுகிறது.  லேயர் கேக், பிளாக் ஃபாரஸ்ட் கேக், லாவா கேக் etc. பொதுவாக  முட்டை சேர்க்கும் பொழுது கேக் மிகவும் மென்மையாகவும் பஞ்சு போலவும் இருக்கும். முட்டை சாப்பிடாதவர்கள் அதற்கு பதிலாக தயிர் அல்லது வெண்ணை ஒரு கப் அளவு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எதுவும் சேர்க்காமல் மிகவும் மென்மையான கேக்கை நீங்கள் இப்பொழுது செய்யலாம்.

சுவையான சாக்லேட் கேக் செய்ய சில குறிப்புகள்

  • இந்த கேக் செய்வதற்கு நீங்கள் மைதா மாவு பயன்படுத்தலாம் அல்லது கோதுமை மாவு பயன்படுத்தலாம்.
  • கேக் செய்தபின்னர்  மேலே சாக்லேட் அல்லது நியூட்டலா போன்றவற்றை தடவி பரிமாறலாம்.
  • இது குழந்தைகளின் ஸ்னாக்ஸ் பாக்ஸ் மற்றும் மாலை நேரங்களில் காபியுடன் சுவையாக இருக்கும்.
  • உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் அல்லது இட்லி பாத்திரம் போன்று அகலமான பாத்திரத்தில் செய்யலாம்.

இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக்,  ஓரியோ கேக்,  ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்

முட்டை இல்லாத சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பால்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1 கப் மைதா மாவு
  • 1/4 கப் கொக்கோ பவுடர்
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 3/4 கப் சர்க்கரை
  •  5 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்

முட்டை இல்லாத சாக்லேட் கேக் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் அரை கப் பால் சேர்த்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

2. நன்கு கலந்து பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தில்  மேலே ஒரு ஜல்லடை வைத்து, ஒரு கப் மைதா மாவு, கால் கப் கொக்கோ பவுடர், ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், ஆகியவற்றை சேர்க்கவும்.

4. கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.

5. அதனுடன் முக்கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

6. எல்லாவற்றையும் நன்கு கலந்து பின்னர் நாம் தயாராக வைத்துள்ள பால் மற்றும் எலுமிச்சை சாறு கலவையை அதனுடன் சேர்க்கவும்.

7. மேலும் 5 தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

8. தேவைப்பட்டால் சிறிதளவு பால் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

9. ஒரு அகலமான பாத்திரத்தில் உள்ளே stand வைத்து  மூடி வைக்கவும் அல்லது ஓவன் இருந்தால் ஓவன் இருந்தால் 180C/360F ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

10. இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி கொள்ளவும்.

11. தயாராக வைத்துள்ள கேக் மாவை அதனுடன் சேர்க்கவும்.

12. இப்பொழுது இப்பொழுது பாத்திரத்தினுள் வைத்து நான் 40 முதல் 50 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது oven பயன்படுத்தினால் 40 முதல் 45 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

13. 50 நிமிடங்களுக்கு பிறகு ஒரு சிறிய குச்சியை கொண்டு கேக் மாவை குத்தவும் மாவு ஒட்டாமல் வந்தால் தயாராக உள்ளது.

14. சுவையான மற்றும் மென்மையான சாக்லேட் கேக் தயார்.

Leave a Reply