Cupcake recipe in Tamil | ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? | Cupcake Recipe | Cupcake without Oven

See this Recipe in English

கப் கேக் மென்மையான சுவையான கப் கேக் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதற்கு மைதா மாவு, சர்க்கரை, முட்டை, ஆகியவை இருந்தாலே போதும். கப் கேக்  பல விதமாக செய்யலாம், சாக்லேட் கப் கேக், வெண்ணிலா கேக், கேரட் கேக், ஸ்டாபெரி கேக். நான் கீழே மிகவும் சுலபமான முறையில் குறைவான நேரத்தில் செய்யக் கூடிய வெண்ணிலா கேக் செய்முறை கொடுத்துள்ளேன் வெண்ணிலா கேக் நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீ யுடன் பரிமாறலாம். 

சுவையான கேக் செய்ய சில குறிப்புகள் 

  • கேக் இருக்கு முட்டை அடிக்கும் பொழுது கரண்டியால் கலக்கி கொள்ளலாம் அல்லது எலெக்ட்ரிக் beater கொண்டு அடித்துக் கொள்ளலாம்.
  • முட்டை பயன்படுத்தும் பொழுது  பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே பயன்படுத்த வேண்டாம்  இரண்டு மணி நேரம் முன்பு எடுத்து வைக்கவும். கேக் செய்ய முட்டை ஜில்லென்று இருக்கக் கூடாது.
  • சாக்லேட் சிப்ஸ், டூட்டி ப்ரூட்டி ஆகியவற்றையும் சேர்த்து செய்யலாம். சுவை கூடுதலாக இருக்கும்.
  • கேக் செய்வதற்கு நீங்கள் அகலமான பாத்திரம் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பிரஷர் குக்கரின் washer எடுத்துவிட்டு பயன்படுத்தலாம்.
  • கேக் செய்யும் பொழுது தீயை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளவும் அல்லது கரிந்து போவதற்கு வாய்ப்புள்ளது.

இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக்,  ஓரியோ கேக்,  ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்

 

See this Recipe in English

கப் கேக் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 1/4  கப் மைதா மாவு
  • 4 முட்டை
  • 3/4 கப்  சர்க்கரை
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 50 மில்லி லிட்டர் பால்
  • 6 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி உப்பு

கப் கேக் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 50ml பால் சேர்த்து சூடானதும் 6 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

 2. வெண்ணை உருகி பின்னர் அடுப்பை அணைத்து தனியே எடுத்து வைக்கவும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

4. அதனுடன் 3/4  கப் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

 5. முட்டை வெள்ளை நிறமாகும் வரை எலெக்ட்ரிக் beater கொண்டு அடிக்கவும்.

6. பின்னர் 1 கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/4 தேக்கரண்டி உப்பு, ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

7. முட்டை, மாவு ஆகியவற்றை மென்மையாக கிளறவும்.

 8. இப்பொழுது தயாராக வைத்துள்ள பால்-வெண்ணை கலவையை சேர்க்கவும்.

9. மீண்டும் மென்மையாக கிளறிவிடவும். கப் கேக் மாவு தயாராக உள்ளது.

10. இப்போது அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து  அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வைக்கவும் இதுவே நீங்கள்  ஓவனில் செய்வதாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸ் / 360 டிகிரி ஃபாரன்ஹீட் preheat செய்து கொள்ளவும்.

11. சிறிய சிறிய கிண்ணங்களை எடுத்து அதனுள்  கப் கேக்குகான லைனரை வைக்கவும். 

12. இப்பொழுது கேக் மாவை பாதி அளவு நிரப்பவும்.

13. அடுப்பில் சூடாக உள்ள பாத்திரத்தில் இந்த சிறிய கிண்ணங்களை உள்ளே ஒவ்வொன்றாக அடுக்கவும்.

14. இப்பொழுது மூடி வைத்து குறைவான தீயில் 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும். இதுவே நீங்கள் ஓவனில் செய்வதாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸ் அல்லது 360 டிகிரி ஃபாரன்ஹீட் 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்.

15. இருபது நிமிடங்களுக்கு பின்னர் ஒரு சிறிய குச்சி கொண்டு  குத்தவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். 

Leave a Reply