கேரளா ஸ்பெஷல் அவியல்

அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு.  அவியல் பல விதமான காய்கறிகளை கொண்டு செய்யப்படுகிறது.

கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், மற்றும் விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் தேங்காய் விழுது சேர்த்து செய்யப்படும் ஒரு சூப்பரான உணவு வகை. சுவையான அவியல் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

அவியல் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 1 வாழைக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 5 பீன்ஸ்
  • 5 கோவக்காய்
  • 3 தேக்கரண்டி கெட்டித்தயிர்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

  • 4 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்

தாளிக்க தேவையான பொருட்கள்

  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை

அவியல் செய்முறை

1. காய்கறிகளைக் கழுவி விட்டு,  (தோல் நீக்கிய நீக்க வேண்டிய காய்கறிகளை தோல் நீக்கி விட்டு),  நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கி வைத்த காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து,  மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.

3. மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர் த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. காய்கறிகள் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது, மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் 3 முதல் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

5. பின்னர் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அவருடன் சேர்த்து கலக்கவும்.

6. சுவையான அவியல் தயார். இது அடை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.

Leave a Reply