Filter Coffee in Tamil | பில்டர் காபி | Degree Coffee | Degree Filter Coffee

See this Recipe in English

பில்டர் காபி இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியாவின் பாரம்பரிய மிக்க காபி வகை. கெட்டியான டிகிரி பாலில் புதிதாக இறக்கிய டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படுவது பில்டர் காபி.  இது மெட்ராஸ் காபி,  மயிலாப்பூர் பில்டர் காபி,மைசூர் காபி, பாலக்காடு  ஐயர்  காபி என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும்,  கும்பகோணம்  டிகிரி காபி தமிழ் நாட்டின்  பாரம்பரியமிக்க காபி. வீடே கமகமக்கும் வகையில் சுவையான பில்டர் காபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.


சுவையான பில்டர் காபி செய்ய  சில குறிப்புகள்

  • பில்டர் காபி செய்வதற்கு முழுக் கொழுப்புள்ள திக்கான பால்  பயன்படுத்தவும்,  தண்ணீர் கலந்த பால்,  கொழுப்பு நீக்கிய பால், பயன்படுத்தினால் பில்டர் காபி சுவையாக இருக்காது.
  • 85% காப்பி 15% சிக்கரி கலந்த கோத்தாஸ்காபி பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் விருப்பப்பட்ட காபி பொடியை சேர்த்து பில்டர் காபி செய்யலாம்.
  • சிக்கரி கலக்காத காபி  பொடி  பயன்படுத்தினால், ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்க முடியும்,  சிக்கரி கலந்த காபி பொடியில் 2 முதல் 3 முறை வரை டிகாஷன் எடுக்கலாம்.
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்,  வெள்ளைச் சர்க்கரை தவிர,  நாட்டுச் சர்க்கரை சேர்த்தாலும் காபி சுவையாக இருக்கும்.
  • 2 நபர்களுக்கு தேவையான காபி செய்ய பொருட்கள் கொடுத்துள்ளேன், நீங்கள் உங்கள் தேவைக்கு தகுந்தாற்போல் காபி தூள், பால், மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதர வகைகள் –மசாலா டீ, பர்கர் வடை, தவா பர்கர், வெஜிடபிள் பர்கர்,  சோயா கட்லட்பாசிப்பருப்பு இட்லி,  மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா , மொரு மொரு வடை, காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், ரவா இட்லி, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, வெஜிடபிள் கட்லெட்.

 

 

See this Recipe in English

பில்டர் காபி செய்ய தேவையான பொருட்கள் 

  • காபி பொடி – 3 மேஜைக்கரண்டி
  • தண்ணீர் – 150ml
  • பால் – 300ml
  • சர்க்கரை – 1 தேக்கரண்டி
  • சர்க்கரை –  தேவையான அளவு

செய்முறை

1. பில்டர் காபி செய்ய முக்கியமான பொருள் காபி பில்டர். இதனை சுத்தமாக கழுவி,  மேல் பில்டரை தீயில் காட்டி எடுக்கவும் அப்பொழுது அடைப்புகள் இருந்தால் நீங்கிவிடும்.

2. பில்டரில் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்னர் 3  மேஜைக்கரண்டி காபி பொடி  சேர்க்கவும்.

4. அதனை லேசாக  அழுத்தி விடவும்.

5. ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6. தண்ணீர் நன்றாக  கொதித்த பின்னர் காபி  பில்டரில் ஊற்றவும்.

7. இப்பொழுது அதனை மூடி வைக்கவும்.

8. ஒரு காபி தம்ளரில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

9. வடிந்துள்ள டிகாஷனில் கால் டம்ளர் சேர்த்துக் கொள்ளவும்.

10. ஒரு பாத்திரத்தில் 300ml அல்லது தேவையான அளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.

11. பால் கொதித்து பொங்கி வந்ததும்,  காபி  டம்ளரில்  ஊற்றவும்.

12. நுரை வர ஆற்றிக் கொள்ளவும்.

13. சுவையான பில்டர் காபி தயார். 

 

Leave a Reply