பாதுஷா/Badusha in Tamil

பாதுஷா இந்தியாவின் மிகவும் பாரம்பரியமான இனிப்பு வகை பொதுவாக இது தீபாவளிக்கு செய்யப்படுகிறது. பாதுஷா மென்மையான மற்றும் சுவையான இனிப்பு வகை எளிமையான செய்முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கடைகளில் செய்வது போன்ற சுவையான பாதுஷாக்களை வீட்டிலேயே செய்யலாம்.  

 

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா – 2 கப்
  • வெண்ணை -1/4 கப்
  • தயிர் – 1/2 கப்
  • பால் – 1/4 கப்
  • சர்க்கரை -1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா – 1/4  தேக்கரண்டி
  • எண்ணெய் அல்லது நெய் பொரிக்க தேவையான அளவு

சக்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்

  • சர்க்கரை – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • குங்குமப்பூ – சிறிதளவு 
  • ஏலக்காய்த்தூள் –  1/2 தேக்கரண்டி

அலங்கரிப்பதற்கு தேவையானபொருட்கள்

  • துருவிய தேங்காய்  – 4 தேக்கரண்டி
  • மஞ்சள் நிறம் –  ஒரு சிட்டிகை

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

2. அதில் உருக்கிய வெண்ணெய், தயிர், பால் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக மாவு பிசைந்து வைக்கவும்.

3. மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

4. சிறிய உருண்டைகளை லேசாக தட்டி நடுவில் அழுத்தி குழிபோல் செய்யவும்.

5. ஒரு பாத்திரத்தில்  1 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

6. சர்க்கரை உருகி வரும் பொழுது அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.

7. சக்கரை பாகு கலவையை கொதிக்க வைக்கவும்,  குலோப்ஜாமூன் செய்யும் அளவிற்கு  பாகு திக் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.

8. பாதுஷாக்களை தற்பொழுது மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

9. பொரித்து எடுத்த பாதுஷாக்களை சர்க்கரை பாகில் சேர்த்து 2-3 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

10. வாணலியில் 4 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்,  அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.

11. இப்பொழுது கலர் செய்த தேங்காயை மேலே வைத்து அலங்கரிக்கவும்.

12. சுவையான பாதுஷாக்கள் தயார்.

This Post Has 2 Comments

  1. balachander

    Simple and easy for beginners

Leave a Reply