பிரெட் மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் இதற்கென ஓவன் தவிர வேறு எந்த விதமான இயந்திரங்கள் தேவை இல்லை. வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் பிரட் செய்தால் நம் கடைகளில் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளலாம் அதே சமயத்தில் மென்மையாக நல்ல புஸ் என்று பிரஷ் ஆன பிரெட்டை வீட்டிலேயே செய்து சாப்பிடும் பொழுது அதன் சுவையும் மனமும் அலாதியாக இருக்கும்.
பிரட்டை வைத்து நாம் பிரட் சாண்ட்விச், பிரட்ஸ் டோஸ்ட், பிரட் பட்டர் ஜாம், போன்ற அடிப்படையான காலை உணவுகளை செய்து சாப்பிடலாம். அது தவிர ஃப்ரஞ்ச் டோஸ்ட், சில்லி சீஸ் டோஸ்ட், பிரெட் ஆம்லெட், பிரட் மசாலா, சில்லி பிரட், ப்ரெட் ரோல், கார்லிக் பிரட், போன்ற விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம்.
சுவையான பிரட் செய்ய சில குறிப்புகள்
- பிரட் செய்யும் பொழுது பிரெஷ் ஆன ஈஸ்ட் பயன்படுத்தவும் பழைய ஈஸ்ட் பயன்படுத்தினால் பிரட் மென்மையாக இருக்காது.
- ஈஸ்ட் ஆக்டிவேட் செய்ய வெதுப் வெதுப்பான தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளவும், தண்ணீர் சூடாக இருந்தாலும் அல்லது ஆறிப் போய் இருந்தாலும் ஈஸ்ட் வேலை செய்யாது.
- சர்க்கரை அல்லது தேன் ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம் சர்க்கரை சிறிதளவு கூடுதலாக சேர்த்தால் பிரட் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும்.
- பிரட் செய்யும் பொழுது அந்த மாவுடன் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி அல்லது உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம் சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.
- பிரட் மாவு பிசையும் பொழுது மென்மையாக கையில் தொட்டுப் பார்க்கும் பொழுது விரல்களில் ஒட்டும் அளவிற்கு மாவு இருக்க வேண்டும், மாவு இறுக்கமாக இருந்தால் பிரட் மிகவும் கெட்டியாக இருக்கும்.
- 15 முதல் 20 நிமிடங்கள் மாவை பிசைந்து கொள்ளவும், அதிக நேரம் செய்யும் பொழுது மாவு மென்மையாகவும் அதே சமயத்தில் பிரெட் சாப்பிடும்பொழுது பஞ்சு போலவும் இருக்கும்.
- வெண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக அதே அளவு சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- தண்ணீருக்கு பதிலாக வெதுவெதுப்பான பாலில் ஈஸ்டை கலந்து ஆக்டிவேட் செய்யலாம்.
- குறைந்த அளவில் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் அளவிற்கு புளிப்பு இல்லாத மோர் சேர்த்துக் கொள்ளலாம்.
- வீட் குளூட்டன் (wheat gluten) சேர்ப்பது விருப்பமானது, வீட் குளூட்டன் சேர்க்காமல் அதே முறையில் பிரட் செய்யலாம்.
மசாலா பிரட் டோஸ்ட்
பிரட் குலாப் ஜாமுன்
பிரட் சில்லி
பிரெட் பீட்சா
பாவ் பன்
தேவையான பொருட்கள்
- வெதுவெதுப்பான தண்ணீர் – 1 ½ கப்
- சக்கரை – 1 மேஜை கரண்டி
- தேன் – 1 தேக்கரண்டி
- வெண்ணெய் – ¼ கப
- மைதா மாவு – 2 ½ கப்
- ஈஸ்ட் – 1 சிறிய பாக்கெட் – 2 ¼ தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – ¼ தேக்கரண்டி
- வீட் குளூட்டன் (wheat gluten) – 2 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு சிறிய பாத்திரத்தில் 1 ½ கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 மேஜை கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
2. பின்னர் ஒரு பாக்கெட் ஈஸ்ட் சேர்த்துக் கொள்ளவும், சிறிய பாக்கெட்டுகளில் ஈஸ்ட் கிடைக்கவில்லை என்றால் 2 ¼ தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனையும் நன்றாக கலந்த பின்னர் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். இப்பொழுது ஈஸ்ட் பொங்கி வந்திருப்பதை காணலாம் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
4. ஒரு பெரிய பாத்திரத்தில் 2 ½ கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ¼ கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, உப்பு – 1 தேக்கரண்டி மற்றும் ¼ கப் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி வீட் குளூட்டன் (wheat gluten) சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் தயாராக உள்ள ஈஸ்ட் கலையை சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனை 15 முதல் 20 நிமிடங்கள் மென்மையாக பிசைந்து கொள்ளவும். கையில் தொட்டால் விரல்களில் ஒட்டும் அளவிற்கு பிசைந்து கொண்டால் தான் பிரட் மென்மையாக வரும், அல்லது பிரட் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது.
7. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணை தடவிக் கொள்ளவும், அதில் தயாராக உள்ள மாவை வைத்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
8. 1 மணி நேரத்திற்கு பிறகு மாவு உப்பி வந்திருப்பதை காணலாம் இப்பொழுது அதனை மீண்டும் 1 ஒரு நிமிடத்திற்கு பிசையவும்.
9. பின்னர் ஒரு பிரட் பானில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்துள்ள மாவை அழுத்தமாக உருட்டி சுருட்டிக் கொள்ளவும். பின்னர் அதனை அதில் வைத்து 30 நிமிடங்கள் வைக்கவும்.
10. 30 நிமிடங்களுக்கு பின்னர் பிரட் டின் அளவிற்கு மாவு உப்பி வந்திருப்பதை காணலாம்.
11. இப்பொழுது ஓவனை ப்ரீஹீட் செய்து கொள்ளவும் அதில் 350 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு 35 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
12. நன்றாக ஆறிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
13. சுவையான பிரட் தயார்.