Tawa Burger in Tamil | தவா பர்கர் | Easy Burger | Street style Burger

See this Recipe in English

தவா பர்கர் ஒரு சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு உணவு வகை. பொதுவாக பர்கர், காய்கறிகள் அல்லது மாமிசத்தால் செய்யப்பட்ட கட்லட், வெங்காயம், தக்காளி, மற்றும் சீஸ் ஆகியவற்றை உள்ளே வைத்து செய்யப்படுகிறது. ஆனால் தவா பர்கர் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு கட்லெட் செய்ய தேவையில்லை. அதேசமயம் 10 முதல் 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். 

மும்பை இந்தியாவின் நான்கு மாபெரும் நகரங்களின் ஒன்று இது எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடியது.  மும்பை நகரத்திற்கு பல சிறப்புகள் உள்ளது. அதில் தெருவோர கடைகள் மிகவும் முக்கியமானது, ஆயிரக்கணக்கான சிற்றுண்டி வகைகளை ருசிக்கலாம். பானி பூரி, வடாபாவ் போன்றவையும் தெருவோர கடைகளில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய சிறப்பு பெற்ற உணவு வகைகள்.  இது மும்பையின் தெருவோரக் கடைகள் மிகவும் பிரபலம்.

சுவையான தகவல்கள் செய்ய சில குறிப்புகள்

  1. தவா பர்கர் செய்யும் பொழுது  எண்ணை மற்றும் வெண்ணை பயன்படுத்தலாம் அல்லது வெண்ணை மட்டுமே பயன்படுத்தி செய்யலாம் அது மேலும் சுவையாக இருக்கும்.
  2. பீன்ஸ், பீட்ரூட், பட்டாணி, போன்ற விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கும் பொழுது அதனுடன் அரை கப் அளவு துருவிய பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
  4.  உருளைக்கிழங்கு சேர்ப்பதற்கு பதிலாக ஒரு கப் அளவு துருவிய பன்னீர் சேர்த்தால் பன்னீர் பர்கர்.
  5. செஷ்வான் சாஸ் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  6.  நீங்கள் செடார் சீஸ் அல்லது முசரளா சீஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதர மேற்கத்திய உணவுகள் பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், வெஜிடபிள் பர்கர்,பிரெட் பீட்சா.

 

See this Recipe in English

தவா பர்கர் செய்ய தேவையான பொருட்கள்

  • 2 பர்கர் பன்
  • 3 உருளைக்கிழங்கு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 2 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
  • 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய குடை மிளகாய்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 1 பொடியாக நறுக்கிய தக்காளி
  • 1 தேக்கரண்டி டொமேட்டோ கெட்சப்
  • 1 தேக்கரண்டி செஷ்வான் சாஸ்
  • 1/4 கப் துருவிய சீஸ்

தவா பர்கர் செய்முறை 

1. ஒரு தவா அல்லது பானில் 2 தேக்கரண்டி எண்ணெய்,  மற்றும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

2. அதனுடன் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

4. அதனுடன் 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

5. 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

6. 3 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது மூடிவைத்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

 8. அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கவும்.

9. தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

10. ஒரு சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

11. தக்காளி மென்மையாக வெந்த பின்னர் ஒரு தேக்கரண்டி டொமேடோ கெட்சப் மற்றும் ஒரு தேக்கரண்டி செஷ்வான் சாஸ் சேர்த்து கலக்கவும்.

12. கால் கப் துருவிய சீஸ் சேர்த்து சீஸ் கரையும் வரை கலக்கவும்.

13. வேகவைத்து தோல் நீக்கிய மூன்று உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்கு கலக்கவும்.  உருளைக்கிழங்கு மசாலா தயார்.

14. பர்கர் பன்னை பாதியாக நறுக்கிக்கொள்ளவும்.  தவாவில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடானதும் பர்கர் பன்னை சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும்

15. இப்பொழுது தயாராக வைத்துள்ள மசாலாவில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி  வைக்கவும்.

16. அதன்மேல் சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பன்னை மூடவும்.

Leave a Reply