முட்டைகோஸ் பொரியல் தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொரியல் வகை. இது விரைவாக செய்யக்கூடிய ஒரு பொரியல் வகை. எல்லா வகையான சாதத்துடனும் சுவையாக இருக்கும். வழக்கமான முட்டைகோஸ் பொரியல் உடன் கேரட் மற்றும் பட்டாணி சேர்க்கும் பொழுது மேலும் சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இது செய்வதற்கு மிகவும் சுலபமானது. மேலும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணமயமாகவும் இருக்கும். முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் சாம்பார், ரசம், மற்றும் தயிர் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். இதே முறையில் நீங்களும் முட்டைகோஸ் பொரியல் செய்து சுவைத்து மகிழுங்கள்.
முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
துருவிய முட்டைகோஸ் – 1 கப்
துருவிய கேரட் – ¾ கப்
பச்சை பட்டாணி – ¼ கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ½ கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கடலை பருப்பு – தேக்கரண்டி
துருவிய தேங்காய் – தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, கருவேப்பிலை, மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
2.அதனுடன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
3.நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
4.தற்பொழுது துருவிய முட்டைகோஸ் சேர்த்து கலக்கவும்.
5.அதனுடன் துருவிய கேரட், மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும்.
6.அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாக கிளறி விடவும்.
7.தற்பொழுது 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
8.துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
9. சுவையான முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல் தயார்
.