Kara Poli recipe in Tamil | கார போளி | Savory Poli in Tamil | Kara Poli | Spicy Potato Stuffed Poli

கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி  செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.

சுவையான போளி செய்ய சில குறிப்புகள்

  • போளி செய்வதற்கு மைதாமாவு  பயன்படுத்தும் பொழுது சப்பாத்திக்கு பிசைவது விட இலக்கமாக பிசைந்து 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.
  • மாவு ஊற வைக்கவில்லை என்றால் போளி செய்ய வராது.
  • மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தி இதே முறையில்  போளி செய்யலாம்.
  • குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாய் சேர்க்காமல் செய்யலாம்.
  • மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம். 
  • போளியை தட்டி தோசைக்கல்லில் இடும் பொழுது இரண்டு பக்கமும் நெய் தடவி வேக வைக்கவும்,  கூடுதலாகச் நெய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

இதர சிற்றுண்டி வகைகள் –  காராபூந்திபொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, முறுக்கு, மிக்சர் செய்வது எப்படி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை , காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ் 

 

 

 மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

  •  மைதா மாவு  – 1 கப்
  •  உப்பு  – தேவையான அளவு
  •  எண்ணெய்  – 2 தேக்கரண்டி

 உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்

  • எண்ணெய்  – 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 
  • உப்பு  – தேவையான அளவு 
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  – 2 
  • வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு  – 3 
  • மிளகாய் தூள்  – 1  தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள்  – 1 தேக்கரண்டி 

போளி இடுவதற்கு

  • நெய் – தேவையான அளவு

 

செய்முறை

1. மேல் மாவு செய்வதற்கு ஒரு கப் மைதா மாவு, தேவையான உப்பு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது விட மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

 2. அதனை மூடி வைத்து 2  மணி நேரத்திற்கு  ஊறவைக்கவும்.

3. உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு ஒரு பானில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

 4. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. பச்சைமிளகாய் வதங்கிய பின்பு  3 உருளைக்கிழங்குகளை வேக வைத்து மசித்து சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

7. உருளைக்கிழங்கு மசாலாவை ஆறவைக்கவும்.

8. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்துக் கொள்ளவும்.  வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை சிறியதாக தட்டவும்.

9. அதனுள் ஒரு உருண்டை உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.

10. மேல் மாவை வைத்து மூடவும்.

11. மசாலா வெளியே வராமல் நைசாக தட்டிக் கொள்ளவும்.

12. ஒரு தோசை தவாவில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள போளியை சேர்க்கவும்.

13. ஓரளவு சிவந்த பிறகு திருப்பிப் போட்டு மீண்டும் சிறிதளவு நெய் தடவவும்.

14. இரண்டு பக்கமும் நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு எடுத்து விடவும். சுவையான கார போளி தயார்.

 

Leave a Reply