முட்டை சாண்ட்விச்

egg_sandwich_

முட்டை சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை நேர உணவு வகை இதனை நீங்கள் மிகவும் சுலபமாக செய்யலாம்,  பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும், அலுவலகம் செல்வோருக்கும், சரியாக சமையல் தெரியாதவர்களுக்கும், ஏற்றது முட்டை சாண்ட்விச். இது தவிர நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  சுவையான மற்றும் சுலபமான முட்டை சாண்ட்விச் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Scrambled egg sandwich

முட்டை சாண்ட்விச் செய்ய தேவையான பொருட்கள்

  • 2 முட்டைகள்
  • 2 பிரட் துண்டுகள்
  • ½  தேக்கரண்டி மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 4 தேக்கரண்டி பால்
  • 2 தேக்கரண்டி வெண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி

முட்டை சாண்ட்விச் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

egg_sandwich

2. அதனுடன் பால், உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்.

3. அதனை நன்கு கலக்கவும்.

4. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணையை சூடாக்கவும்.

5. அதனுடன் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை சேர்க்கவும்.

6. மிகக் குறைவான தீயில் மென்மையாக கிளறவும்.

7. கலவை கெட்டியாகும் வரை  குறைவான தீயில் லேசாக கலக்கிவிடவும்.

8. கலவை கெட்டியானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

9. ஒரு தோசைக்கல்லில் மீதமுள்ள  வெண்ணையை சூடாக்கவும்,  அதனுடன் இரண்டு பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக  டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

10. தட்டில் பிரட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைக்கவும்,  சுவையான பிரட் சாண்ட்விச் தயார்.

  • தேவைப்பட்டால் நீங்கள் பிரெட்டின் மேல் சாஸ், மயோனைஸ்,  கார சட்னி,  ஏதாவது ஒன்றை தடவிக் கொள்ளலாம்.
  • இதேபோன்ற செய்முறையில் முட்டை தவிர வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  •  வேகவைத்த காய்கறிகளை மட்டும் வைத்து  செய்வது வெஜ் சாண்ட்விச்.

Leave a Reply