Burger Bun in Tamil | பர்கர் பன் | Burger Bun without Oven | Burger Bun recipe

See this Recipe in English

பர்கர் பன் பஞ்சு போல  மற்றும் மென்மையாக மட்டுமின்றி சுவையாகவும்,  மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். பர்கர் பன் செய்வதற்கு மிகக் குறைவான பொருட்களை தேவை,  மைதா மாவு, ஈஸ்ட், சர்க்கரை,  வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யலாம். பர்கர் பன் ஓவனில் செய்யலாம் அல்லது ஓவன் இல்லாமல் வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் செய்யலாம். சுவையான பர்கர் பன் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.


சுவையான பர்கர் பன் செய்ய சில குறிப்புகள்

  • மைதா மாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் பர்கர் பன் செய்யலாம்.
  • ஈஸ்ட்  ஆக்டிவேட் செய்ய வெதுவெதுப்பான பால் பயன்படுத்தவும்,  பால் அதிக சூடாக அல்லது சூடு குறைவாக இருந்தால் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகாது.
  • பால் சேர்ப்பதற்கு பதிலாக தண்ணீரில் ஈஸ்ட்டை ஆக்டிவேட் செய்யலாம்.
  • வெண்ணை சேர்க்கும் பொழுது அதனை ஃப்ரிட்ஜில் இருந்து உடனடியாக சேர்க்காமல், மென்மையான வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் (room temperature butter).
  • விருப்பப்பட்டால்  வெண்ணை சேர்க்கும் பொழுது அதனுடன் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
  • மாவு பிசையும் பொழுது 10 – 15 நிமிடங்களுக்கு பிசைந்துகொள்ளவும்.
  • பன் மாவு  மென்மையாக இலகுவாக இருக்கவேண்டும் சப்பாத்தி மாவு போன்று கடினமாக இருக்கக் கூடாது.
  • தேன் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு சர்க்கரை சேர்த்து ஈஸ்ட் ஆக்டிவேட் செய்யலாம். 

இதர வகைகள் – வெஜிடபிள் பர்கர், தவா பர்கர், சிக்கன் பர்கர், பர்கர் வடை, முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி  கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக்,  ஓரியோ கேக்,  ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்.

 

பர்கர் பன் செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா மாவு – 2 கப் – 280g
  • பால் – 1 கப் – 250ml
  • தேன் – 1 தேக்கரண்டி
  • ஈஸ்ட் – 1  தேக்கரண்டி
  • சர்க்கரை – 1  மேஜை கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • வெண்ணை – 4  மேஜைக்கரண்டி 
  • வெள்ளை எள் –  சிறிதளவு

செய்முறை

1. ஒரு பவுலில் 1 கப் வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1  ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்னர் 1  ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும்,  அதனுடன் 1 தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து கொள்ளவும்.

4. ஒரு ஸ்பூன் வைத்து கலந்த பின்னர் 10 – 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.

5. ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் 1 மேஜைக்கரண்டி சர்க்கரை & தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 7. பின்னர் 4 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

 8. அதனுடன் ஆக்டிவேட் செய்து வைத்துள்ள ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.

 9. அதனை 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ளவும். நன்றாக பிசைந்து பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை வைத்து மூடி வைத்து 2 மணி நேரம் வைக்கவும்.

10. மாவு நன்றாக பொங்கி வருவதை பார்க்கலாம்.


11. அதனை மீண்டும் 5 நிமிடங்களுக்கு பிசையவும்.

 12. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மேலே சொன்ன அளவிற்கு 7 முதல் 8 பன் வரை செய்யலாம்.

13. அடுப்பில் வைப்பதாக இருந்தால் சிறியதாக உருட்டிக் கொள்ளவும்,  ஓவனில் வைத்து பேக் செய்ய ஓரளவு  பெரியதாக உருட்டிக் கொள்ளவும்.

14. பின்னர் ஒரு சிறிய தட்டில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது ஓரளவு இடைவெளிவிட்டு உருண்டைகளை வைக்கவும்.

15. பின்னர் அதனை துணி வைத்து மூடி மீண்டும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.

16. அடுப்பில் பன் செய்வதாக இருந்தால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை மூடி வைத்து மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.

17. 30 நிமிடங்களுக்குப் பிறகு உப்பி வந்திருப்பதைக் காணலாம், அதன் மீது சிறிதளவு பால் தடவி மேலே வெள்ளை எள் தூவி கொள்ளவும்.

18. அதனை பாத்திரத்தினுள் வைத்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும்.

19. ஓவனில் செய்வதற்கு  பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு,  மாவு உருண்டைகளை வைத்து,  மூடி வைத்து 30 நிமிடம் வைத்த பின்னர்,  மேலே பால் தடவி வெள்ளை எள் தூவி கொள்ளவும் தூவிக் கொள்ளவும்.

 20. பிரீ ஹிட் செய்த ஓவனில் வைத்து 400F/200C  15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.


21. பன் தயாரானதும் வெளியே எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து ஆற வைக்கவும்,  மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி வைக்கவும்.

22. சுவையான மற்றும் மென்மையான பர்கர் பன் தயார். 

Leave a Reply