Ennai kathrikkai kulambu | எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு | Brinjal Curry

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இது கத்திரிக்காய், வெங்காயம்,m தக்காளி, புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க குழம்பு வகை. இது தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலம். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு கார சாரமான புளிப்பான குழம்பு வகை. சாதம் மற்றும் இட்லி சுவையாக இருக்கும். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,  ஆந்திராவின் கத்திரிக்காய்  மசாலா இரண்டும் ஒன்று என சிலசமயங்களில் கருதப்படுகிறது ஆனால் இது தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க ஆந்திரா கத்திரிக்காய் மசாலாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சுவையுள்ள குழம்பு வகை.

இதனை நீங்கள்  வரும் வாரம் வரை பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது டப்பாவில் அடைத்து மூன்று நாட்கள் வரை வைக்கலாம் குழம்பு கெடாமல் இருக்கும். மீன் குழம்பு போன்ற எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மறுநாள் சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும்.

சுவையான என்ன கத்திரிக்காய் குழம்பு செய்ய சில குறிப்புகள்

  • எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மசாலா அரைக்கும் பொழுது பெரிய வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அரைத்து சேர்க்கும்போது பெரிய  வெங்காயம் அதிக சுவையுடன் இருக்கும்.
  • மசாலா அரைக்கும் பொழுது நைசாக  அல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்
  • முழு கத்திரிக்காய் சேர்க்கலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
  • கத்தரிக்காய்க்கு பதிலாக நீங்கள் முருங்கைக்காய், வெண்டைக்காய், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது மீன் சேர்த்து மீன் குழம்பு செய்யலாம் அதற்கும் இதே முறை. 

 

எண்ணெய் கத்திரிக்காய் செய்ய தேவையான பொருட்கள்

  • 6  கத்தரிக்காய்
  • 6 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/4  தேக்கரண்டி வெந்தயம்
  • 200 grams சின்ன வெங்காயம்
  • 100 grams பூண்டு பற்கள்
  • கருவேப்பிலை சிறிதளவு

எண்ணை கத்திரிக்காய் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • புளி (எலுமிச்சை பழ அளவு)
  • 4  தேக்கரண்டி  துருவிய தேங்காய்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்/சாம்பார் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

2. கத்திரிக்காய்களை விருப்பப்பட்டால் காம்பு நீக்கி விடலாம் அல்லது  அப்படியே வைத்து நான்காக கீறிக் கொள்ளவும்.

3. எண்ணெய் சூடானதும் கீறி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்களுக்கு அல்லது மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

4. ஒரு மிக்ஸி ஜாரில் 1 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 4 தேக்கரண்டி தேங்காய், ஊற வைத்த புளி ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.

5. அதனுடன் 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்/சாம்பார் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதனுடன் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

7. அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

8. இப்பொழுது கத்தரிக்காயை  சேர்க்கவும்.


9. அரைத்து வைத்த கலவையை கத்திரிக்காயுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

10. 10 முதல் 20 நிமிடங்களுக்கு அல்லது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

 

 

 

Leave a Reply