Gobi Manchurian in Tamil | காலிபிளவர் மஞ்சூரியன் | gobi manchurian recipe | Cauliflower manchurian

காலிஃப்ளவர் மஞ்சூரியன் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே காலிபிளவர் மஞ்சூரியன். காலிபிளவர் மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின்  மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. காலிஃபிளவர் மஞ்சூரியன் மிக எளிய முறையில் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
 
 

காலிஃப்ளவர் வறுக்க தேவையான பொருட்கள்

  • காலிபிளவர் – 400 grams
  • மைதா மாவு – 3 தேக்கரண்டி
  • சோள மாவு – 3 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 1/2  தேக்கரண்டி 
  • கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • ஆரஞ்சு கலர் (kesari color) – 1 சிட்டிகை
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய பூண்டு – 5 பூண்டு பற்கள்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  – 3
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
  • வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி  – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • மிளகுத்தூள்  –  1/2 தேக்கரண்டி
  • சோயா சாஸ்  – 1/2 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
  • சதுரமாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
  • சதுரமாக நறுக்கிய குடைமிளகாய்  – சிறிதளவு
  • வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – சிறிதளவு
  • கான்பிளவர்  – 1/2 தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு

செய்முறை 

  1. தண்ணீரை சுட வைத்து அதில் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  சேர்த்து கொள்ளவும், 3 – 4 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து விடவும்.  
  3. காலிஃப்ளவரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
  4. 3 தேக்கரண்டி மைதா, 3 தேக்கரண்டி  கார்ன் ஃப்ளோர், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஆரஞ்சு கலர் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
  6. அதனுடன் காலிஃப்ளவரை சேர்த்து கலக்கவும்.
  7. வாணலியில்  பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,  சூடானதும் மசாலா தடவிய காலிபிளவரை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  8. பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.
  9. வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 5 பூண்டு பற்கள், 2 பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  10. சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  11. 1/4 கப் வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி (பொடியாக நறுக்கியது), 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  12. தேவையான அளவு உப்பு , 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
  13. பின்னர் 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.
  14. சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  15. பின்னர் பொடியாக நறுக்கிய  வெங்காயத்தாள் சேர்த்து கலக்கவும்.
  16. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
  17. 1/2 தேக்கரண்டி காலிஃப்ளவர் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  18. மஞ்சூரியன் திக்கானதும் வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து கலக்கவும்.
  19. வெங்காயத்தாள்  தூவி ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
  20. காலிஃப்ளவர் மஞ்சூரியன், ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை 

1. தண்ணீரை சுட வைத்து அதில் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கவும்.

2. காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  சேர்த்து கொள்ளவும், 3 – 4 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து விடவும்.  

3. அதனை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

4. 3 தேக்கரண்டி மைதா, 3 தேக்கரண்டி  கார்ன் ஃப்ளோர், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஆரஞ்சு கலர் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

6. அதனுடன் காலிஃப்ளவரை சேர்த்து கலக்கவும்.

7. வாணலியில்  பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,  சூடானதும் மசாலா தடவிய காலிபிளவரை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

8. பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.

9. வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 5 பூண்டு பற்கள், 2 பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

10. 1/4 கப் வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி (பொடியாக நறுக்கியது), 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

11. உப்பு , 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

12. பின்னர் 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.

13. சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

14. பின்னர் பொடியாக நறுக்கிய  வெங்காயத்தாள் சேர்த்து கலக்கவும்.

15. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

16. 1/2 தேக்கரண்டி காலிஃப்ளவர் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

17. மஞ்சூரியன் திக்கானதும் வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து கலக்கவும்.

18. வெங்காயத்தாள்  தூவி ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

19. சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply